“அபுதாபியில் வசித்து வருபவர் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந்தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.

இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அமீரக லாட்டரி வரலாற்றிலேயே மிகப்பெரிய பரிசு இதுதான் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே, லாட்டரியில் பரிசு பெற்றது தொடர்பாக அனில்குமார் பொல்லா கூறுகையில், பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் எந்த மந்திரமோ, வேலையோ செய்யவில்லை. லாட்டரியில் கடைசி எண் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அது என் அம்மாவின் பிறந்தநாள். இப்போது என் எண்ணங்கள் எல்லாம் பரிசு தொகையை எப்படி முதலீடு செய்வது, சரியான வழியில் செலவிடுவது என்பது பற்றி யோசித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version