பல நாடுகளால் தேடப்படும், பிரிட்டனின் முக்கிய பெண் பயங்கரவாதியான, ‘வெள்ளை விதவை’ என்று அழைக்கப்படும், சமந்தா லெத்வைட், இதுவரை, 400ற்கும் மேற்பட்டோரைக் கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான சமந்தா லெத்வைட் (32), சோமாலியாவில் செயற்படும், அல் – ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பல பயங்கரவாத அமைப்புகளுடனும் சதித்திட்டங்களுடனும் தொடர்புபட்டவர் என கூறப்பட்டுள்ளது.
சோமாலியா மற்றும் கென்யாவில், பயங்கரவாதத் தாக்குதல், தற்கொலைப்படைத் தாக்குதல், கார்க்குண்டு தாக்குதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.
இவரால் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 400ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த மாதம், 148 பேர் பலியான கென்யப் பல்கலைக்கழக தாக்குதலுக்கும், இவரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2005 இல் பிரிட்டனில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி, 52 பேரைக் கொன்ற பின், பிரிட்டனை விட்டு வெளியேறி, தலைமறைவான லெத்வைட்டை, உலகிலேயே கொடிய பெண் பயங்கரவாதியாக அறிவித்து, அவரைப் பிடிக்க, சர்வதேச பொலிஸார் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளது.
லெத்வைட்டை, 100க்கும் மேற்பட்ட நாடுகள் தேடி வருகின்றன. இவரை, ‘வெள்ளை விதவை’ என்றும் பல நாடுகளின் பொலிஸார் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது