இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது மனைவியை மறுமணம் செய்து கொள்ளுமாறு கூறியதுடன் மறுமை நாளில் தன்னையே கணவனாக தேர்வு செய்யுமாறு தெரிவித்தது தெரிய வந்துள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் தனது கடைசி மூச்சு இருக்கும் வரை அமெரிக்காவை எதிர்த்து போரிட விரும்பியுள்ளார்.
பின் லேடன் ஓய்ந்துவிட்டதாக கூறப்பட்டபோதிலும் அவரது அப்போத்தாபாத் வீட்டில் இருந்து கிடைத்த ஆவணங்களில் அவர் அமெரிக்காவை எதிர்த்து போரிட தயாராக இருந்தது தெரிய வந்துள்ளது.
பின் லேடன் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இக்கட்டான சூழலில் இருக்க வைத்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.Osama_bin_Laden_portrait
கணவன்
பின் லேடன் தான் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள தனது மனைவிக்கு அனுமதி அளித்துள்ளார். ஆனால் மறுமை நாளில் தன்னையே கணவனாக தேர்வு செய்யுமாறு அவர் கடிதம் எழுதியுள்ளார். பின் லேடன் தனது 3 மனைவிகளில் தனக்கு மிகவும் பிடித்த 3வது மனைவிக்கு தான் இந்த கடிதத்தை எழுதியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
மகன்
மகன் மற்றும் 2 மகள்களின் நலன் பற்றி கேட்டு துவங்கும் அந்த கடிதத்தில் ஒசாமா தனது மகனை போர்க்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். நீ மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பாய் என தெரியும். உன்னை அந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க வழி தேடிக் கொண்டிருக்கிறேன் என ஒசாமா தனது மனைவியிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மறுமை நாள்
ஒசாமா தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, நீ தான் எனக்கு பிடித்தவர். இந்த உலகில் விலை மதிப்பற்றவள் நீ. நான் இறந்த பிறகு நீ திருமணம் செய்ய விரும்பினால் அதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் சொர்க்கத்தில் நீ தான் என்னுடன் இருக்க வேண்டும். மறுமை நாளில் நீ என்னை தான் கணவனாக தேர்வு செய்ய வேண்டும். ஒரு பெண் இரண்டு ஆண்களை மணந்தால் மறுமை நாளில் சொர்க்கத்தில் தன்னுடன் இருக்க யாராவது ஒரு கணவரை அவர் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் புஷ்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஒரு பொய்யர், கொலைகாரர் என்று ஒசாமா தனது கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. நம் கடைசி மூச்சு இருக்கும் வரை அமெரிக்காவை எதிர்த்து போராட வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான போரால் அமெரிக்க பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கடிதம் எழுதியுள்ளார் ஒசாமா.
போர்
தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக புஷ் தெரிவித்துள்ளார். அவர் நம்மை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். நாம் ஒவ்வொரு நாளும் அவரை எதிர்க்க வேண்டும். பாலைவன சிங்கங்களை அவர் குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று ஒசாமா தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version