வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் கடைசியாக வசித்துவந்த பாகிஸ்தானின் அபோடாபாத் நகர வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கா இன்று வெளியிட்டுள்ளது.

தனது சகாக்களுக்கு  ஒசாமா அனுப்பிய கடிதங்கள் மற்றும் இமெயில்களில் கோஷ்டி மோதல்களை கைவிட்டு, அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் வகையில் அதிரடி தாக்குதல்களை நடத்துமாறு அறிவுறுத்தியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க மந்திரிகள் மற்றும் அரசின் முக்கிய உயரதிகாரிகளை ஆளில்லா விமான தாக்குதல் மூலம் தீர்த்துக்கட்டுமாறு ஒசாமா உத்தரவிட்டிருந்த ரகசியமும் இந்த ஆவணங்களின் வாயிலாக வெளியாகியுள்ளது.

மேலும், உலகெங்கிலும்   தீவிரவாத பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய அல் கொய்தா இயக்கத்தினர் வினியோகித்த விண்ணப்பங்களின் (அப்ளிகேஷன் பார்ம்) ஏராளமான பிரதிகளும் ஒசாமாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட விபரம் தெரியவந்துள்ளது.

ஒரு பெரிய நிறுவனத்துக்கு ஆள் தேர்வு செய்வது போன்ற பாணியில் அச்சிடப்பட்டுள்ள அந்த விண்ணப்பங்களில் பெயர், தேசிய இனம், கல்வித்தகுதி, திருமணம் ஆனவரா? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

தற்கொலைப்படையாக மாறும் விருப்பம் உண்டா? நாசவேலையில் ஈடுபட்டு நீங்கள் செத்துப் போனால் அதுபற்றிய தகவலை யாருக்கு தெரிவிப்பது? என்பவை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெளிவாகவும், உண்மையாகவும் பதில் அளிக்கும்படி அந்த விண்ணப்பங்களில் கேட்கப்பட்டுள்ளது.

28E86B6D00000578-3089870-image-a-54_1432146123912

(Papers: Part of a letter titled ‘Verbally released doc for Naseer trial’ recovered during the 2011 raid on al-Qaeda leader Osama bin Laden’s compound in Pakistan (left) and right, a decorative document titled ‘A Letter to the Sunnah people in Syria’)

 

 

Share.
Leave A Reply

Exit mobile version