விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார் யாழ் வாலிபர் ஒருவர். தனது கழுத்தை வெட்டிய பின்னர், காதலியின் கழுத்தையும் வெட்டியுள்ளார். இருவரும் சுயநினைவிழந்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு சம்பவம் வடமராட்சியின் வல்வெட்டித்துறையில் நடந்துள்ளது.

பொலிகண்டி மேற்கைச்சேர்ந்த வாலிபன் ஒருவர், வல்வெட்டித்துறை கொலணியிலுள்ள யுவதியொருவரை நீண்டநாட்களாக காதலித்து வந்துள்ளார்.

வல்வையிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் காலத்திலேயே, வாலிபனின் காதல்வலையில் யுவதி சிக்கிவிட்டார். சுமார் 9 வருடங்கள் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர்.

இந்த சமயத்தில் யுவதிக்கு வீட்டில் பெண் பார்க்கப்பட்டது. மத்திய கிழக்கில் பணிபுரியும் ஒருவரை நிச்சயார்த்தம் செய்யப்பட்டது.

இந்த விடயத்தை அறிந்த காதலன், அதிரடி விபரீத காரியத்தில் இறங்கினார். வீட்டில் யாரும் இல்ல தருணம் பார்த்து காதலியின் அறைக்குள் அத்துமீறி சென்று கதவை பூட்டிய காதலன் விபரீத காரியங்களில் ஈடுபட்டுள்ளார்.

காதலியை பலவந்தமாக கட்டியணைத்து அளவளாவிவிட்டு, தனது கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார். பின்னர், காதலியின் கழுத்தையும் வெட்டியுள்ளார்.

யுவதியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து, கதவைத்திறந்த சமயத்திலேயே இரத்த வௌத்தில் கிடந்த இருவரையும் கண்டுள்ளனர். உடனடியாக அயலவர் உதவியுடன் ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்பொது இருவரும் இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version