தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவதாசன் டென்சிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.
இவர் போட்டிக்கான நேரத்தில் சாதனை நிகழ்த்தாத போதிலும் இலங்கை மெய்வல்லுநர் வரலாற்றில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக தங்கப்பதக்கம் வென்ற முதலாமவர் என்ற சாதனைக்கு உரித்துடையவரானார்.
இவர் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வட மாகாண பாடசாலைகள் அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றதுடன் மாகாண திறந்த நகர்வலப் போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் ஏழு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
இவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தை ஒரு நிமிடம் 02.12 செக்கன்களில் நிறைவுசெய்து இந்தச் சாதனையை நிலைநாட்டினார்.