கமல் படங்கள் என்றாலே சர்ச்சைகள் என்று சொல்லிவிடலாம் என்கிற அளவுக்கு அவர் என்ன செய்தாலும் விமர்சனங்கள் வரிசைகட்டுகின்றன. மே24 ஆம் தேதி அவர் தன்னுடைய அடுத்தபடமான தூங்காவனம் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட மூன்று போஸ்டர்களில் ஒன்றில் ஒரு பெண்ணின் உதட்டில் அவர் முத்தமிட்டுக்கொண்டு நிற்பதைப் போல போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
அதைப்பற்றி ஆளாளுக்கு சமுகவலைதளங்களில் விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள். விமர்சனங்களில் பெரும்பலாலானவை, அவர் வயதைச் சம்பந்தப்படுத்தித்தான் இருக்கின்றன. இவ்வளவு வயசாகியும் அவர் இதுபோல் நடிக்கலாமா என்கிற கேள்விகள்தாம் அதிகம்.
படம் வந்தால்தான் இப்படிப்பட்ட ஒரு காட்சி எதற்காக இருக்கிறது, அந்தக்காட்சி, கதைக்குத் தேவையான காட்சியா இல்லை படத்தின் விளம்பரங்களுக்குப் பயன்படுகிற காட்சியா என்பதெல்லாம் தெரியவரும்.
இந்தப் போஸ்டரிலும் கூட கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டுதான் அந்தப்பெண்ணை முத்தமிட்டுக்கொண்டிருக்கிறார்.
படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் அவர் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த வேடத்துக்காகக் கூட அப்படி நடித்திருக்கலாம் என்று இன்னொரு தரப்பில் சொல்லப்படுகிறது.
எப்படியிருந்தாலும் கமல் படம் என்றாலே சர்ச்சை என்பது தொடர்கதையாகிக்கொண்டிருப்பது மட்டும் உண்மை.
திருட்டுக் கல்யாணம் – சிம்பு பாடும் ஆச மேல ஆச பாடல் மேக்கிங் வீடியோ!