ரோஹிங்யா இனம் அழிக்கப்படுகிறதா மியன்மாரில். குழந்தை பாலுக்கு அழலாம், பால் கொடுக்க தாய் அழலாமா? அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள் ரோஹிங்யாக்கள்… என்னசெய்வதென்று தெரியவில்லை அவர்களுக்கு. படகில் ஏறினார்கள்… துடுப்பை போட்டார்கள் ஆனால் எங்கு போவது… தெரியாது!
ஒரு இனம்… நடுக்கடலில் நாதியற்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. யாரும் அவர்களை கவனிப்பதாக இல்லை…
அவர்களை ரோஹிங்யாக்கள் என்கிறார்கள்.
ஆம்… மியன்மாரில் ஒரு இனத்துக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டம் படகுகள் ஏறி புறப்பட்டது…
ஆனால் எங்கு போவதென்று அவர்களுக்கு தெரியாது. எங்கேயாவது போவோம் தப்பித்தால் போதும் என்றுதான் படகுகளில் ஏறியிருப்பார்கள். இன்றுவரை கடல் நடுவில் படகிலேயே தங்கியிருக்கிறார்கள்.
ஒருவர் அல்ல இருவர் அல்ல கிட்டத்தட்ட ஏழாயிரத்திற்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
ரோஹிங்கியா என்ற இனத்தவர்களாம் இவர்கள்.
ஏன் இப்படி என்ற கேள்விக்கு… யார் இவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர்வரை பரவியிருக்கும் வீரியத்தைத் தெரிந்துகொள்ளமுடியும்.
மியன்மார் என அறியப்படும் பர்மாதான் இவர்களின் சொந்த நாடு. இல்லை இல்லை இது அவர்களின் சொந்த நாடு இல்லை என்பதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
மிக அண்மையில் தான் மக்களாட்சி முறைக்குத் திரும்பியது மியன்மார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியன்மார் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சிக்கு திரும்பி வந்தது.
சந்திரிகாவுடன் ..ஆங் சாங் சூகி
இதற்காகப் பெரிதும் போராடியவர் ஆங் சாங் சூகி என்பது உலகறிந்தது. இவர் பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு அண்மையில்தான் விடுதலையானார்.
உலக நாடுகளில் எழுந்துள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான ஒரு சூழலும், அழுத்தமும் கூட இதற்கு ஒரு காரணமாகும்.
இந்த நிலையில் உலகமே கூர்மையாக மியன்மாரை அவதானித்து வந்த நிலையில் ஏற்பட்ட சோகமே ரோஹிங்யா கலவரம்.
ரோஹிங்யா எனப்படுபவர்கள் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள். இவர்கள் சுமார் 800,000 பேர் வரை மியன்மாரின் மேற்கு மாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.
ரோஹிங்யாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களிடம் இருந்து தனித்துவமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
பல நிலைகளில் ரோஹிங்யாக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்பட்டாலும்கூட, 1950களுக்கு முன்னர் ரோஹிங்யாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்துள்ளனர்.
பெரும்பாலானவர்கள் பங்களாதேஷிலிருந்து கூலிகளாக மியன்மாரில் வேலைக்கு சென்றவர்கள்.
மியன்மாரின் இதரப் பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் ரங்கூன் போன்ற நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.
ரங்கூன், மண்டலாய் போன்ற பகுதிகளில் சில பர்மிய முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்தனர். இவர்களும் ரோஹிங்யாக்களும் ஒன்று என்றும் பலர் நினைக்கிறார்கள்.
ரோஹிங்யாக்கள் வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் நினைப்பது போல முகாலய மன்னர் காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்களும் அல்ல இவர்கள்.
பங்களாதேஷின் சித்தங்காங் எல்லைப் பிரதேச வழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரோஹிங்யாக்கள்.
1950களுக்குப் பின் பல ஆயிரம் பங்களாதேஷ் முஸ்லிம்கள் திருட்டுத்தனமாக மியன்மாரில் குடியேறத் தொடங்கினார்கள்.
பங்களாதேஷ் விடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் ஆயிரம் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மியன்மாருக்குள் நுழைந்து அங்கேயே குடியேறி விட்டனர்.
ரோஹிங்யா என்ற வார்த்தை பெரும்பாலும் 1990களிலிருந்துதான் பத்திரிகைகளில் வரத் தொடங்கியது.
ரோஹிங்யாக்களைப் பற்றிய ஆய்வை கின் மாங்க சா என்பவர் நடத்தினார். இதில் பல அதிர்ச்சித் தகவல்களையும், ஆச்சரியமான விடயங்களையும் அவர் கண்டறிந்தார்.
ரோஹிங்யா என்ற வார்த்தை மியன்மாரின் அராக்கன் மொழி வார்த்தையே அல்லவாம். அராக்கன் மாநிலத்தில் பேசப்படும் எந்தவொரு மொழியிலும் ரோஹிங்யா என்ற வார்த்தை இடம்பெற்றதே இல்லையாம்.
அதனால் வங்காள மொழியில் இந்தச் சொல்லை தேடிய போதும் அப்படி ஒரு சொல் இடம்பெறவே இல்லையாம்.
ஆகவே அவர் பல இலக்கியங்கள், ஆவணங்களில் தேடிய போதும் ஏமாற்றமே மிஞ்சியதாம். பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் குறித்துப் பல நூல்களை எழுதிய மோரிஸ் காலிஸ் ரோஹிங்யா என்ற சொல்லை எங்கும் குறிப்பிடவே இல்லையாம்.
பர்மாவில் 1921ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது அங்கு வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் கூட ரோஹிங்யா என்ற சொல் இடம்பெறவே இல்லை.
ஏன் இத்தனைக்கும் பர்மா கெஸ்ட்டிலும்கூட இவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.
இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள் போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள் என்றும் ஒரு தகவல் சொல்கிறது.
அந்த தகவலின்படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிட அங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கனில் குடியேறி பர்மிய பெண்களை மணந்ததாகவும், அவர்களே ரோஹிங்யாக்கள் எனவும் சொல்ல ஆரம்பித்தார்களாம்.
பல வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர்.
ஆனால் ம்ராக் யூ அரசர்களின் படையில் சில முஸ்லிம் போர்வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் பர்மிய பெண்களை மணந்து வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் சிலர் இன்றளவும் அராக்கன் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களின் எண்ணிக்கை சிலநூறுதான். இவர்களின் தோற்றமும், மொழியும் அராக்கனில் வாழும் ரக்கீங்களை ஒத்து இருக்கும். ஆனால் மியன்மாருக்கு வெளியே இருப்பவர்கள் இவர்களையும் ரோஹிங்யாக்கள் என்று குழப்பிக் கொள்பவர்கள் மிக அதிகம்.
இரண்டாம் உலக யுத்தம் உக்கிரமடைந்த காலங்களில் ஜப்பான் படைகள் பொழிந்த குண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள் பங்களாதேஷிற்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறி அராக்கன் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.
பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாக இக்கிராமங்கள் மாறிப் போனது. இதனால் இப்பகுதிகள் ருவாகாங்க் என்றழைக்கப்பட்டன. ருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள் அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தமாம்.
இந்த நிலையில் பங்களாதேஷிலிருந்து குடியேறிய கூலித் தொழிலாளர்களும், சட்ட விரோத குடியேறிகளும் இந்தக் கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் அராக்கன் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங் காஜா எனச் சொல்வார்களாம்.
அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம் என, அவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழைய கிராமங்கள் என்று அர்த்தமாகும். இதுவே காலப் போக்கில் ரோஹியாக்கள் என்ற சொல்லாக மருவியது.
ரோஹிங்யாக்கள் சிலர் தாங்கள் முகாலயர்களின் வாரிசு என்றுகூட அறிவித்துக்கொண்டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்பதைப் பர்மிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பர்மாவில் குடியேறிய இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் பலர் ரங்கூனில் வாழ்கின்றார்கள். இவர்கள் சரளமாகப் பர்மிய மொழி பேசக் கூடியவர்கள்.
பர்மிய அரசவையில் போர் வீரர்களாக இருந்த சில முஸ்லிம்கள் பர்மியர்களோடு கலப்புற்று பர்மிய மொழி பேசி அராக்கன் உட்படச் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள், தெலுங்கர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள் போன்றோரும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள்.
17ஆம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய போர்த்துகீசியக் கத்தோலிக்கர்களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்களும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களாகக் கூறிக் கொள்ளும் ரோஹிங்யாக்கள் பலருக்கு சுத்தமாகப் பர்மிய மொழியோ, அராக்கனிய மொழியோ பேசத் தெரியாது.
உடை, நடை, பாவனைகள், உணவு பழக்க வழக்கம், உருவ ஒற்றுமை எனப் பலவற்றிலும் ரோஹிங்யாக்கள் பர்மியர்களோடு ஒத்துப் போவதே இல்லை.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழர்களே பர்மிய மொழி சரளமாகப் பேசும் போது ஏன் இவர்களால் பேச முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் ?
இந்த இனக்கலவரம் ஏதோ இப்போதுதான் புதிதாக நடக்கிறது என்றில்லை. இது காலம் காலமாக நடந்துகொண்டுதான் வருகிறது.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குள் பல முறை ரோஹிங்யாக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளது.
ஆனால், அப்போது இதையெல்லாம் இவ்வளவு பெரிதாக சித்திரிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் மியன்மாரில் பிரச்சினைகளை உண்டு பண்ணவும், சீனச் சார்பு நிலையில் இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீது அழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள் தூண்டப்பட்டு, அவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சட்ட விரோதமாகக் குடியேறும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு அரசும் குடியுரிமை வழங்கிவிடாது. அப்படி வழங்கிவிடுவதும் அவ்வளவு எளிதான ஒரு காரியமும் அல்ல.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில ஏற்பாடுகளை அவர்களுக்கு செய்துகொடுக்கலாம்.
உலகில் சில இனங்கள், நாடற்றவர்கள் என்ற அடைமொழிக்குள் அடங்குவார்கள். அதாவது, அவர்களுக்கு எந்த நாட்டின் பிரஜாவுரிமையும் கிடையாது. ஆனால், சர்வதேச சட்டங்கள் புரிந்து கொள்ளும், நாடற்றவர் என்ற சொல்லின் அர்த்தம் வேறு.
எந்த நாட்டினதும் பிரஜாவுரிமை இல்லாதபடியால், அவர்களுக்கு கடவுச்சீட்டு எடுக்க முடியாது. அதனால், அவர்கள் வாழும் பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாது.
ஐ.நா., இவர்கள் நாடற்றவர்கள் என்று அங்கீகரித்தால், ஒரு சில தீர்வுகள் காணப்படமுடியும். வெளிநாடு செல்ல வேண்டிய தேவையுள்ளவர்கள், இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரயாணம் செய்ய முடியும்.
ஆனால், ரோஹிங்யா வங்காளிகளின் நிலைமை வேறு. ஐ.நா., அல்லது சர்வதேச நாடுகள் எதுவும், அவர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை.
பர்மிய அரசின் நிலைப்பாட்டை சொல்லத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகளினால் “கணவாட்டி” என்று மதிக்கப்படும் ஆங் சங் சூகி கூட, ரோஹிங்ய வங்காளிகளை வெளிநாட்டு குடியேறிகளாக தான் கருதுகின்றார்.
பர்மாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜெனரல் நீ வின், 1982ஆம் ஆண்டு, ரோஹிங்யாக்களின் குடியுரிமையை பறித்த பின்னர் தான் அவர்களது அவலம் ஆரம்பமாகியது.
இறுதியாக நடந்த இந்தக் கலவரத்தின் ஆரம்பத்தில், இரண்டு இனங்களுக்கு இடையிலான இனக்கலவரமாகவே தோன்றியது. கலவரம் ஆரம்பித்த முதலாவது வாரம், இரண்டு பகுதியிலும் 29 பேர் மாண்டனர்.
2500 வீடுகள் எரிக்கப்பட்டன. ஒன்பது விகாரைகளும், ஏழு மசூதிகளும் சேதமாக்கப் பட்டன. ஆனால், மிக விரைவிலேயே பௌத்த ராகின்களின் கை ஓங்கியது.
மியன்மார் அரசும், இராணுவமும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றன. நிலைமையை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு, இராணுவம் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தது.
ஆனால், அது ரோஹிங்யாக்களை வீட்டுக்குள் முடங்க வைக்கும் சதித் திட்டம் என்பது பின்னர் தெளிவானது. ரோஹிங்யாக்களை வேட்டையாடியவர்களை ஊரடங்குச் சட்டம் ஒன்றும் செய்யவில்லை.
பல வீடுகளில், ரோஹிங்யாக்களின் பிணங்கள் மட்டுமே கிடந்தன. அங்கே ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தது.
ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமை இல்லாததனால், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் எதுவும் கிடையாது.
உயர்கல்வி கற்க முடியாது. ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்க முடியாது. வர்த்தகம் செய்ய முடியாது. இவை எல்லாவற்றையும் விட, திருமணம் செய்வதற்கு கூட இராணுவ உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கொடுமையிலும் கொடுமை.
அதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது.
இப்போதைக்கு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவர்களின் உடனடி தேவை சொந்தமாக ஒரு நாடு அல்ல…
படகு களிலிருந்து இறங்கு வதற்கு ஒரு நாடு அவ்வளவு தான்…
On Wednesday, more than 400 Rohingya were rescued by fishermen from a green wooden boat, whose fate had captured worldwide attention after harrowing scenes emerged of desperate migrants pleading for help when the trawler was found by media floating off Thailand.
In the past three weeks, more than 3,000 migrants who fled persecution in Myanmar and poverty in Bangladesh have landed in overcrowded boats on the shores of Southeast Asian countries better known for their white-sand beaches. Aid groups estimate that thousands more are stranded at sea following a crackdown on human traffickers that prompted captains and smugglers to abandon their boats.