எனது பெற்றோரை நீதிமன்றத்துக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கும் அழைத்தப்போது தான் பட்ட வேதனை எப்படி இருந்திருக்குமென தற்போது எண்ணிப்பார்க்குமாறு முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் ஷவீன் பண்டாரநாயக்க காரியவசம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளார்.
நிதிமோசடி விசாரணை பிரிவுக்கு வருமாறு தனது தாயாரான சிராந்தி ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக நாமல் ராஜபக்‌ஷ அவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவின் பதில்கள் வழங்கும் பகுதியில்  சிரானி பண்டாரநாயக்கவின் மகன் ஷவீன் பண்டாரநாயக்க காரியவசம் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
“எனது தாய் , தந்தை , அத்தை , மாமா மற்றும் நான் ஆகியோர் அரசியல்வாதிகள் இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டரை வருட காலத்தில் உங்களின்  அரசாங்கத்தினால் எனது பெற்றோருக்கு எந்தளவு துன்பங்களை கொடுத்திருப்பீர்கள் என எண்ணிப்பாருங்கள்.
எனது பெற்றோரை இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவுக்கு அழைக்கும் போதும் , நீதி மன்றங்களுக்கு கொண்டு செல்லும் போதும் மற்றும் அரச ஊடகங்கள் காரணமின்றி விமர்சிக்கும் போதும் எனது மனநிலை எப்படி இருந்திருக்கும்.
நீங்கள் ஒரு சட்டத்தரணியென்ற வகையில் நீதி நியாயத்துடன் பாருங்கள்” என அந்த பதிவில் ஷவீன் பண்டாரநாயக்க  குறிப்பிடப்பட்டுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version