கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.

வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது.

தலைநகர் தோஹா அருகே இதற்காக தனி நகரத்தையே கத்தார் எழுப்பி வருகிறது. இந்த நகரம் மற்றும் கால்பந்து மைதான கட்டுமானப்பணிகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான்,இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது 2022 ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, போட்டி ஒன்றுக்கு சராசரியாக 62 தொழிலாளர்கள் உயிரிழப்பார்கள். இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை.

கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.

கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது.

உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே ஃபிஃபாவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

விளையாட்டு மைதானங்களின் கட்டுமானப்பணிகளின் போது இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு

2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு

2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை – இருவர் உயிரிழப்பு

2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு

2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு

2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு

Share.
Leave A Reply

Exit mobile version