சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :-
கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார்.
காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவிதத் தகவல்களும் இல்லாத நிலையில் பெற்றோர் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டிருந்ததுடன், அந்த படுகொலையானது அங்கு பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று 12 வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
வடக்கில் இவ்வாறு சிறுமிகள் மீதான குறிப்பாக, பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், கொலைகள் என்பன அங்கு பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடக்கின் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க கல்வி அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன் கடந்த 14 நாட்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வாறானதொரு நிலையில், தற்போது காணாமல் போயுள்ள 16 வயது மாணவியான மணியம் விதுஸாவிற்கு என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியாத மனநிலையில் கிளிநொச்சி மாவட்டமே திகைத்துள்ளது.