தேனிலவுக்காக சென்ற ஜோடியில், மணமகன் அதுவும் நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெல்தோட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியில் தேனிலவை கழிப்பதற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணமகனான தெல்தோட்ட ரெலிமங்கொடயில் வசிக்கும் 33 வயதான ஜி.தர்மசேன என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இவர் இராணுவத்தில் 10 வருடங்கள் பணியாற்றியும் உள்ளார்.

இவர், முல்கம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதான யுவதியை கடந்த 29ஆம் திகதி கரம்பிடித்துள்ளார்.

திருமண வைபவத்தின் பின்னர் தேனிலவுக்காக தெல்தோட்டையில் உள்ள ஹோட்லொன்றுக்கு சென்றுள்ளனர்.

அறையை விட்டு நள்ளிரவு வேளையில் வெளியேறிய மணமகன் விடிய விடிய வரவேயில்லை. விடியும் வரை காத்திருந்த மணமகள் இதுதொடர்பில் கலஹா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார், பொலிஸ் நாயை பயன்படுத்தி காணாமல் போனநபரை தேடும் நடவடிக்கையை முடுக்கிவிட்டபோதிலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version