தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ’லயன் பார்க்’ சுற்றுலாப் பயணிகளிடையே மிகப் பிரபலமானது.
காரணம் சிங்கத்தை க்ளோஸ்-அப்பில் பார்க்க வேண்டுமா? என்று அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் செய்யும் விளம்பரமும், இதற்கென சுற்றுலாப் பயணிகளை காரில் கூட்டிச் செல்லும் சஃபாரி பயணமும்தான்.
சிங்கத்தை க்ளோஸ்-அப்பில் பார்க்கும் இந்த திகில் அனுபவத்திற்காக உலகம் முழுவதிலும் இருந்து பல சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வது வாடிக்கை.
இந்த திகில் அனுபவத்திற்காகவே, அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு 22 வயது இளம்பெண்ணும் அவரது நண்பரும் நேற்று அங்கு சென்றிருந்தனர்.
அப்போது திடீரென ஜன்னலுக்குள் தலையை நுழைத்த ஒரு சிங்கம் அந்த பெண்ணை வெளியே இழுத்து தாக்கியது. இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். அவருடன் சென்ற நண்பருக்கும் காயம் ஏற்பட்டது.
ஆனால் அவர்கள் அதைக் கேட்பதில்லை என்று கூறினார். லயன் பார்க்கில் கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட 3-வது உயிரிழப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.