மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீயான்குளத்தில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மீயான்குளம் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவரின் இனந்தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் தெரிவித்ததையடுத்தே மேற்படி இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
மரணித்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர் என்றும் இவர் ஒரு முஸ்லிம் என்றும் இவரது மரணம் யானை தாக்கி மரணித்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து குளத்தில் போட்டார்களா என்ற சந்தேகம் உள்ளதாகவும், இச் சம்பவம் குறைந்தது ஒரு கிழமைக்கு முதல் நடந்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.