பாரீஸ்: ‘கூழானாலும் குளித்துக்குடி’ அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனா தண்ணி கஷ்டத்துல அதை கடைபிடிக்க முடியாதுன்னு சொன்னாலும் ஒருநாள் விட்டு ஒருநாளாவது குளிக்கலாம் தப்பில்லை.
அடக்கொடுமையே அப்படின்னு சொல்ற மாதிரி பத்துல நாலு ப்ரெஞ்சுகாரங்க தினசரி குளிக்க மாட்டாங்கலாம். 11 சதவிகித ப்ரெஞ்சுகாரங்க மூணு நாளைக்கு ஒருதடவையும், இன்னும் சிலரோ நாலு நாளைக்கு ஒருதடவையும், ஏன் வாரத்திற்கு ஒரு தடவையும்தான்! குளிப்பார்களாம்.
இதை நான் சொல்லலை ஒரு ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க. எது எதுக்கு ஆய்வுன்னு யோசிக்கிறீங்களா?
இதுவும் முக்கியம்தானே பாஸ். ப்ரெஞ்சுக்காரர்களின் குளியல் பழக்கம் பற்றி எடுக்கப்பட்ட ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளது. படியுங்களேன்.

02-1433222776-bathing566
மூணு நாளைக்கு ஒருமுறை
பத்தில் 4பேர் தினசரி குளிக்க மாட்டார்களாம். 11 சதவிகிதம் பேர் மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே குளிப்பார்களாம்.
வாரத்திற்கு ஒருமுறை
சில நாற்றம் பிடித்தவர்கள் நாலு நாளைக்கு ஒருமுறையும், சிலரே ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீரை உடலுக்கு காட்டுவார்களாம். ஏன் ஜல்பு புடிச்சுக்குமோ? எல்லாம் பெர்ப்யூம் போட்டு சமாளிச்சுப்பாங்களாம்.
தினமும் குளிப்பவர்கள்
நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தினசரி குளிப்பார்களாம்.

பல கோடி செலவு
ப்ரெஞ்சு நாட்டு தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களின் சுகாதாரத்திற்காகவே பலகோடி ரூபாய்களை செலவிடுகிறது. ஆனாலும் அவர்கள் சுத்தம், சுகாதராம்னா என்னா பாஸ் என்று கேட்கின்றனராம்.
ஆரோக்கியம் சரியில்லையே
ப்ரெஞ்சுகாரர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் அசால்டாக இருக்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்கிறார் ஆய்வை மேற்கொண்ட விர்ஜினியா மால்லெட்.
கையை கழுவுங்கப்பா
டாய்லெட் போனா கையை சோப்பு போட்டு கழுவி ஹைஜீனிக்கா இருங்கப்பா என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் பல நாட்டு மக்களும் இதை கடைபிடிக்கையில் ப்ரெஞ்சுகாரர்கள் மட்டும் இதை கடைபிடிப்பதே இல்லையாம்.

பிரிட்டன்வாசிகள்
ஐரோப்பியர்களிலேயே தினசரி குளித்து சுத்தபத்தமாக இருப்பதில் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ்காரர்களை பீட் செய்துவிட்டார்களாம் பிரிட்டிஷ்காரர்கள்.

பிரிட்டன் பெண்கள்
கடந்த மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 80 சதவிகித பிரிட்டன் பெண்கள் தினசரி குளிப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்களாம். பத்தில் மூன்று பிரிட்டன் பெண்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான் குளியல் போடுவார்களாம். இதை சரும பராமரிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணிய மிச்சம் பண்ண என்னவெல்லாம் செய்றாங்க?
Share.
Leave A Reply

Exit mobile version