மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எல்லை வீதியில் தாயும் மகனும் வீடொன்றினுள் மர்மமான முறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸர் தெரிவித்தனர்.

policeeஆரையத்பதி எல்லை வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய செல்லத்தம்பி சிவபாக்கியம் அவரது மகனான 50 வயதுடைய செல்லத்தம்பி அமிர்தகுமார் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் சடலங்களை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதற்கமைய சடலங்கள் இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

மரணமான மகன் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும் தாய் நீண்ட நாட்களாக நோய்வாய் பட்டிருந்தவர் என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version