மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் நகைச்சுவை உணர்வுக்கு பெரும் பங்கு உண்டு.
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, தன் நகைச்சுவை உணர்வால் உலக மக்களுக்கே கிச்சு கிச்சு மூட்டி வருகிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தலையில் ஏற்பட்ட கட்டியால் (மூளைப் புற்றுநோய்) கடும் அவதிக்கு உள்ளானார்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தி அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றினர்.
பொதுவாக சின்ன சின்ன தழும்புகள்கூட அழகை பாதிக்கும் என்று பலர் அதனை மறைக்கும் நிலையில், பார்ப்பவர்களிடம் எல்லாம் தனக்கு ஆபரேஷன் நடந்ததைச் சொல்ல வேண்டிய தர்மசங்கடமான நிலையில் உள்ள அவரோ, அறுவை சிகிச்சை செய்து தண்டவாளம் போல் இருக்கும் தழும்புகளுக்கு அடியில் ஜிப் ஒன்றை பொருத்தியுள்ளார்.
இதனால், அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் சிரிக்க, அவர்களுடன் சேர்ந்து அவரும் தன் வலியை மறந்து உற்சாகமாக சிரிக்கிறார். அவருடைய புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் அதற்கு மேல் சிரிக்கின்றனர்.