உண்மையான விளாடிமிர் புட்டின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது இருப்பவர் போலி என முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முன்னாள் மனைவி லியிட்மிலாவை புட்டின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக விளாடிமிர் புட்டின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கபட்டு வருகின்றன. விளாடிமிர் புட்டினை சுற்றி ஒரு மர்மம் உள்ளதாக தகவல் வெளியாகி கொண்டிருந்தன.
இந்நிலையில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் முன்னாள் மனைவி லியிட்மிலா, ஜேர்மனை சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் அதிச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அப் பேட்டியில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டன. தற்போது இருக்கும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அவருடைய தோற்றத்தில் உள்ளார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
என் கணவர், துரதிருஷ்டவசமாக, நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து விட்டார். நான் அதை பகிரங்கமாக ஒப்புகொள்ள வேண்டும். ஏனெனில் அவரது சார்பில் என்ன நடக்கிறது என நான் பார்க்க முடியவில்லை. இது மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
புட்டினை கொலை செய்தவர்கள் என்னையையும் எனது மகள்களையும் கொலை செய்து விடுவார்கள் என அஞ்சினேன்.
எங்கள் குடும்பம் சரியான நிலையில் இல்லை. எனக்கு இப்போது திருமணமாகி விட்டது. நான் உளவுத்துறை அதிகாரி ஒருவரை காதலித்தேன். ஆனால் கடந்த காலத்தில் நடந்த சம்பவம் வேறு விதமாக இருந்தது.
மிகவும் கீழ்த்தரமானவர். கொடுமையான மனிதர். கொடுங்கோலன் அவர் என்னை எதுவும் கேட்கவில்லை. சாதாரணமாக என் எண்ணத்தை கூட அவர் அறிந்து கொள்ளவில்லை. குடும்ப அமைப்புக்கு நான் அவரது குழந்தைகளுக்கு ஒரு தாயாக நான் தேவைப்பட்டேன்.
நான் நீண்ட நாட்களாக கொடுமைபடுத்தபட்டதோடு சிறையில் அடைக்கப்பட்டேன். இதனால் நீண்ட நாட்கள் சூரிய ஒளியையோ வேற்று மனிதர்களையோ பார்க்க முடியவில்லை.
அதை இப்போது நினைக்கும் போதும் பயமாக இருக்கிறது. “விவாகரத்து” என் விடுதலையாக இருந்தது. ஆனால் அவருடைய மரணம் தொடர்பில் விவரிக்க முடியாது. அவர் கடினமா காலத்தில் இருந்த போது எனக்கு எதுவும் கூறவில்லை.
இதேவேளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கூட எனது பிள்ளைகளை கொல்வதற்காக மரண அச்சுறுத்தல் வந்தது.
ஆனால் நான் தற்போது வெளிநாட்டில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றேன். ஆனால் ரஷ்யா வில் என்ன நடக்க போகிறது என்று எனக்கு கவலையாக உள்ளது என்றார்.