காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி கையை அறுத்துக்கொண்டு இளம்பெண் நள்ளிரவில் காதலன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் சரஸ்வதி (27). பட்டதாரியான இவர், தபால் பட்டுவாடா செய்யும் ஊழியர்.
சேலம் தாதாகபட்டியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுகுமார்(27). இவரும் சரஸ்வதியும் ஒரே கல்லூரியில் படித்தபோது காதலித்து உள்ளனர்.
ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. சுகுமார் வேலை செய்து வரும் ஐதராபாத்திற்கு சரஸ்வதியை அழைத்துச் சென்று, குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுகுமாருக்கு அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பவானியில் சுகுமாருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது.
இதுபற்றி அறிந்த சரஸ்வதி, திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கடந்த சனிக்கிழமை அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சுகுமாருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் மணப்பெண்ணுக்கு தெரியவர, அவர் சுகுமாருடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு, அவரது உறவினரை திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே சுகுமாருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தாதாகப்பட்டி பெருமாள் கோயில்மேடு முதல் தெருவில் உள்ள, சுகுமார் வீட்டு முன்பு சரஸ்வதி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சரஸ்வதி வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சுகுமாரின் பெற்றோர், வீட்டை பூட்டி விட்டுசென்று விட்டனர்.
அவர்கள் எப்படியும் வீட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த சரஸ்வதி, சுகுமாரின் பெற்றோர் வராததால் அதிர்ச்சியடைந்தார். திடீரென சரஸ்வதி, இடது கைைய பிளேடால் அறுத்துக் கொண்டார். ரத்தம் சொட்ட, சொட்ட அங்கேயே அமர்ந்திருந்தார்.
இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதியில் மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் விரைந்தனர். தர்ணாவில் ஈடுபட்ட, சரஸ்வதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
பின்னர் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் இருந்து சரஸ்வதி மாயமாகிவிட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
நள்ளிரவில் காதலன் வீட்டுமுன் இளம்பெண், கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Share.
Leave A Reply

Exit mobile version