கடைசிக்கட்டப்    போரின்  உச்சக்கட்ட    நேரத்தில்.. “புலிகள் இயக்க   தலைவர்கள்    தங்களின்   (அனந்தியின்  புருசன்   உட்பட) உயிர்களை   காப்பாற்றுமாறு  யார்  யாருக்கு  எல்லாம்   ரெலிபோன்  எடுத்து    கெஞ்சி  மன்றாடினார்கள்  தெரியுமா?

கடைசிக்கட்டப்   போர்     நடந்தகொண்டிருந்த போது,  வெளிநாட்டினர்   (அமெரிக்கா,  ஐரோப்பிய நாட்டினர்,  ஐ.நா.சபையினர்)  வந்து   தங்களை   எப்படியும்  காப்பாற்றுவார்கள்  என  நம்பியிருந்த  புலித்   தலைவர்கள்..,

(நாங்கள்   வெளிநாட்டில்  உள்ள   தமிழர்களை   வீதியில்  இறக்கி   போராட்டம்  நடத்தி  அமெரிக்கா  அல்லது   ஐ.நா.சபையினரை   வன்னிக்கு அனுப்புவோம்  என  வெளிநாட்டில்  உள்ள  புலிகளின்  பிரதிநிதிகள்    புலித்  தலைமைக்கு   உறுதியளித்ததின்  பிரகாரம்.)

“அதை  நம்பி பொதுமக்கள்  யாரும்   தங்களைவிட்டு   தப்பித்துப்  போகவிடாமல்…, ஆயுதமுனையில்  பயமுறுத்தி,  மறித்து  வைத்திருந்து   விட்டு,   கடைசிக்கட்ட  நேரத்தில்  தங்கள்  உயிர்களை  மட்டும்  காப்பாற்றிக்கொள்ள  வேண்டும்   என்ற    ஒரே   நோக்கத்தில்  புலித்தலைவர்கள்   ஒவ்வொருவரும்,   ஆள்    ஆளுக்கு  தங்களுக்கு   கிடைத்த  தொலைபேசி  எண்களுக்கெல்லாம்    அழைப்பினை   ஏற்படுத்தி   தங்களை  காப்பாற்றுமாறு  கெஞ்சி  மன்றாடியுள்ளார்கள்  என்கின்ற   விடயங்கள்  வெளிவரத்தொடங்கியுள்ளன.

அந்த வகையில்தான  அனந்தியின் புருசன் எழிலனும்   கனிமொழிக்கு  ரெலிபோன் செய்து தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும்  காப்பாற்றும் படி கனிமொழியிடம்  அழுதுகுளறியுள்ளார்.

இப்படிதான்…  புலிகள்  இயக்கத்திலிருந்த உயர்மட்ட தலைவர்கள் எல்லோரும் தங்களுக்கு கிடைத்த  தொலைபேசி  இலக்கங்களோடு தொடர்பினை  ஏற்படுத்தி தங்களை  காப்பாற்றுமாறு  அழுதுகுளறியுள்ளார்.

கடைசிக்கட்ட போர் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தபோது.  மூன்றுமாத காலமாக  “வெளிநாடுகளில்  இருந்த புலியாதரவாளர்களும்   எல்லாருடைய கால்களிலும்  வீழந்து, எல்லாவகையான  போராட்டங்களும்  செய்து பார்த்தார்கள்.

ஆனால்.. வெளிநாட்டு அரசாங்கங்கள்  இவர்களை  ஏறுடுத்தும் பார்க்கவில்லை.  வெளிநாட்டு அரசாங்கங்களுடன்  புலம்பெயர்  புலிகளுக்கு  கோபமும்  இல்லை, தாபமும் இல்லை.

எதிரிகள், துரோகிகள்  என்று  சொல்லப்பட்ட  எல்லார்   கால்களில்   புலிகள்  வீழ்ந்து  கெஞ்சி அழுதவரலாறுதான்  மிஞ்சியிருக்கிறது.

உண்மை  என்றோ  ஒருநாள்  வெளிச்சத்துக்கு  வந்தே தீரும். ஆனால்….  அந்த உண்மையை கூட   வெளிசத்துக்கு  கொண்டுவராமல்   மூடிமறைக்க  இலங்கை  அரசாங்கமும்,  புலிகள் தரப்பும்  நீண்டகாலமாக    முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச  விசாரணை  ஒன்று  நியாயமாக  நடைமுறைக்கு வந்தால்  எல்லா  உண்மைகளும்  வெளிவரும்.

இறுதிக்கட்டப்    போரை  நடத்திய  சர்வதேசத்தினருக்கு   நடந்தவைகள்  எல்லாம்   நன்றாக     தெரியும்.

அதனால்தான்… இலங்கைக்கு  எதிராக   போர்க்குற்ற  விசாரணையை  ஒன்றை முன்னிறுத்தி  பல்வேறு   வழிகளிலும்   இலங்கையை  நெருக்கடிக்குள்   சிக்க வைத்திருக்கிறார்கள.

பொறுத்திருந்து  பார்போம்.  உண்மை வெல்லுமா?  என்பதை…

கடைசிக்கட்டப்   போர்  நடந்து கொண்டிருந்த போது….  இலங்கை   இராணுவத்தினர்    எறிகணைகள், ஷெல்கள், பொஸ்பரஸ்  குண்டுகள், கிளாஸ்ரர் குண்டுகளை   மக்கள்   மீது  மழை மாதிரி   பொழிந்துகொண்டிருந்த போது….,

அனந்தி  சசிதரன்  என்னசெய்து கொண்டிருந்தார் தெரியுமா?

தொலைக்காட்சி   பார்த்துக்கொண்டிருந்தவராம்  என்று   இந்த  கலந்துரையாடலில்  கூறுகிறார்  கேளுங்கள்..

“கடைசி  நேர  போர்க்களத்தில்   எத்தனை   ஆயிரம் பேர்,   எவ்வளவு   துன்பப்பட்டு,  துயரப்பட்டு   இறந்தார்கள  என்பதும், போரில்  கை, கால்கள்…  போன்ற  அவயவங்களை  இழந்து… பிணங்களின்  மேலே  நடந்துவந்து   தப்பி பிழைத்தவர்கள்  என்கின்ற  துயர வரலாற்றை  உயிருடன்  எஞ்சியிருக்கும்  வன்னி மக்கள் கேட்டால்  சொல்லுவார்கள்.

ஆனால்.. புலித்தலைவர்களும், பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும்  எதுவுமே  நடக்கவில்லை  என்பதும்,  அந்த நேரத்தில கூட  அவர்கள்  தொலைக்காட்சி  பார்க்ககூடிய வசதியாக    பாதுகாப்பாக  இருந்துள்ளார்கள்  என்றால்  அது எப்படி??

மக்களை  கேடயமாக  வைத்திருந்து   தங்களையும், தங்கள்  குடும்பத்தையும்   பாதுகாத்திருக்கிறார்கள்  என்பது   இதிலிருந்து  வெட்ட  வெளிச்சமாகின்றது.  இவர்கள்  புனிதமானவர்கள்??

 

Share.
Leave A Reply

Exit mobile version