புவனேஷ்வர் : புகாரை வாங்க மறுத்த போலீசாரை சாக்கடையில் தள்ளிப் பொதுமக்கள் அடித்து உதைத்துப் புரட்டியெடுத்த சம்பவம், ஒடிஸா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹால்டிபடா என்ற பகுதியில் வசிப்பவர் சந்தோஷ் என்கிற ஜெனா. இவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து நெருங்கிப் பழகியுள்ளார்.

இதில் கர்ப்பமான அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு சந்தோஷ் மறுத்துள்ளார்.

இதனால் பாதிக்கபட்ட பெண், தனது உறவினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே சந்தோசை அழைத்து கண்டித்து திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால் பலன் இல்லாமல் போகவே, பெண்ணின் உறவினர்கள், சந்தோஷ் மீது லக்‌ஷ்மிசாகர் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க சென்றனர்.

ஆனால் அங்கு புகாரை வாங்க போலீசார் மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், காவல் துறை அதிகாரிகள் என்று கூட பார்க்காமல் இன்ஸ்பெக்டர் ராஜட் ராய் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக் ஹன்ஸ்டாயை அருகில் உள்ள சாக்கடையில் தள்ளி புரட்டி, அடித்து உதைத்தனர்.

odisa policeஇதனிடையே இந்த தாக்குதலுக்கு வேறு ஒரு காரணமும் போலீசார் மீது கூறப்படுகிறது.

அதில் சந்தோஷ் தனது மனைவியை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து அடித்ததாகவும், தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும், அந்த கோபத்தில்தான் தற்போது புகாரை வாங்க மறுத்ததை காரணமாக வைத்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுமார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும், பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version