டெல்லி: லெஸ்பியன் ஜோடி தனது பெற்றோர்களை சந்திக்கச் செல்லும் ஒரு புதிய விளம்பரம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் 2 பெண்மணிகள் ஒன்றாக வாழ்ந்து வருவது, உரையாடுவது, அவர்களிடையே உள்ள காதல் பற்றி பேசுகின்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று போல்டு இஸ் பியூட்டிபுல் என்ற பெயரில் இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
இதை பிரபல ஷாப்பிங் வலைதளமான மிந்த்ரா பேஷன் நிறுவனம் யூ டியூபில் பிரபலப்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பல பேர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோ 10 நாட்களில் சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.