வித்­தியா வன்­பு­ணர்வுக் கொலை­யுடன் புங்­கு­டு­தீவில் இது மூன்­றா­வது சம்­ப­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. எனவே, இதற்கு ஒரே­வழி குற்­ற­வா­ளி­க­ளுக்­கான தண்­ட­னை­யினை துரி­த­மாக வழங்­கு­வ­தே­யாகும். தண்­டனை கடு­மை­யா­கவும், விரை­வா­கவும் இருந்தால் குற்றச்செயல்­களை குறைக்­க­மு­டியும்.

மக்­க­ளுக்கு சட்­டத்­தின்­மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வேண்­டு­மாயின் தண்­ட­னைகள் விரை­வாக வழங்­கப்­பட வேண்டும் என்று வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்டத்த­ரணி கே.வி. தவராசா  வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: வித்­தியா வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கில் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்தின் நலன் கருதி நீதி­மன்றில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி என்ற வகையில் இந்த கொலையின் பின்னணி என்­ன­வென்று நீங்கள் கரு­து­கின்­றீர் கள்?

பதில்: கடந்த மே மாதம் 13 ஆம் திகதி ஊர்­கா­வற்­று­றையில் உள்ள புங்­கு­டு­தீவில் சிவ­லோ­க­நாதன் வித்­தியா என்ற 18 வயது பாட­சாலை மாணவி வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டார்.

யுத்­தத்தின் பின்னர் வடக்கில் இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­த­போதும், வித்­தி­யாவின் இந்த படு­கொலை நிலத்­திலும், புலத்­திலும் வாழும் தமிழ் மக்கள் மத்­தியில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த சம்­ப­வத்தின் பின்­ன­ணியை பார்க்­கின்­ற­போது,

பாதிக்­கப்­பட்ட குடும்­பத்தின் நலன் கருதி நீதி­மன்றில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி என்ற வகையில் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, கொடி­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, கொழும்பு குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பொறுப்­ப­தி­காரி ஆகி­யோ­ரினால் ஊர்­கா­வற்­றுறை நீதவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட விசாரணை­களின் முதல் அறிக்­கை­யையும், மேல­திக அறிக்­கை­க­ளையும், புல­னாய்வுப் பிரிவின் மேல­திக அறிக்­கை­யி­னையும் பார்­வை­யிட்டேன்.

மேலும், வித்­தி­யாவின் தாயார் சிவ­லோ­க­நாதன் சரஸ்­வதி, வித்­தி­யாவின் சகோ­தரன் சிவ­லோ­க­நாதன் நிசாந்தன் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து பெற்றுக் கொள்­ளப்­பட்ட தக­வல்­க­ளுடன் புங்குடுதீவு ஊர் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன், சம்­பவம் நடை­பெற்­ற­தாக கூறப்­படும் இடத்­தையும் பார்­வை­யிட்­டதன் மூலமும் அறிந்­து­கொண்ட விட­யங்கள் வரு­மாறு,

சம்­பவ தினத்­தன்று வழ­மைபோல் காலை 7 மணிக்கு பாட­சா­லைக்குச் சென்ற வித்­தியா, மாலை­யா­கியும் வீடு திரும்­பாத கார­ணத்­தினால் பதற்­ற­ம­டைந்த அவ­ரது தாயும், சகோ­த­ரரும், உற­வி­னர்­களும் வித்­தி­யாவை தேடி­ய­லைந்­துள்­ளனர்.

பாட­சா­லையில் சென்று விசா­ரித்­த­போது, வித்­தியா பாட­சா­லைக்கு செல்­ல­வில்லை என்­ப­த­னையும் அவர்கள் அறிந்­துள்­ளார்கள்.

இத­னை­ய­டுத்து, பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ய­வென குறி­கட்­டுவான் பொலிஸ் சோதனை நிலை­யத்­திற்கு சென்­றுள்­ளனர்.

அங்கு முறைப்­பாடு செய்­ய­மு­டி­யா­த­தனால். பின்னர் ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அன்று மாலை 6.30 மணி­ய­ளவில் சென்­றுள்­ளனர். அங்கு பெண்­பொலிஸார் வரும்­வரை காக்­க­வைத்து இரவு 9 மணி­ய­ளவில் முறைப்­பாட்டை பதிவு செய்­துள்­ளனர்.

பின்னர் வித்­தியா இளம் பிள்­ளை­யா­க­யி­ருப்­பதால் யாரா­வது பைய­னுடன் ஓடிப்­போ­யி­ருக்க வேண்­டு­மென அலட்­சி­ய­மாக ஒரு பொலிஸ் அதி­காரி கூறி­யுள்ளார்.

அன்­றைய தினம் இரவு 11 மணி­ய­ளவில் வீடு திரும்­பிய வித்­தி­யாவின் தாயாரும் சகோ­த­ரனும் உற­வி­னர்­களும் கிரா­மத்­த­வர்­களும் ஒன்று சேர்ந்து 14ஆம் திகதி அதி­காலை 5 மணி­ய­ளவில் வித்­தி­யாவைத் தேடஆரம்­பித்­துள்­ளனர்.

அவர்­க­ளது வீட்­டிற்கு சிறிது தொலைவில் உள்ள பிர­தான வீதியில் தேடிச் சென்­றுள்­ளனர். குறித்த வீதியின் இரு­பு­றத்­திலும் 150 மீற்­றர்­வரை பற்­றைக்­கா­டாக காணப்­ப­டு­கின்ற இடத்தில் தேடிச் சென்றபோது, அவர்­க­ளுடன் சென்ற வளர்ப்பு நாய் குரைக்க ஆரம்­பித்­த­துடன் வித்­தி­யாவின் சப்­பாத்­தையும் கண்­டு­பி­டித்­துள்­ளது.

தொடர்ந்து நாய்க்குப் பின்னால் வித்­தி­யாவின் சகோ­தரன் நிசாந்தன் சென்­ற­போது பாழ­டைந்த கிணற்­றுக்கு அரு­கா­மையில் ஒதுக்குப் புறத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இரண்டு கால்களும் மரத்தில் இழுத்துக் கட்­டப்­பட்ட நிலையில் வித்தியாவின் இறந்த உடலை கண்­ட­பொழுது ‘வித்­தியா’வென கத்­தி­ய­வாறு மயக்­க­ம­டைந்­துள்ளார்.

கேள்வி: பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் இறப்­பிற்­கான கார­ணமும் பொலி­ஸா­ரினால் சம்­பவ இடத்தில் கைப்­பற்­றப்­பட்ட தடயப் பொருட்­களும் எவை­யெனக் கூற­மு­டி­யுமா?

பதில்: சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் அங்­கி­ருந்த வித்­தி­யாவின் உடலை பார்­வை­யிட்ட பொழுது வித்­தியா அணிந்திருந்த பாட­சாலை சீருடையால் கைகள் இரண்டும் கட்­டப்­பட்­டி­ருந்­தன மற்றும் இரு கால்­களும் மரத்தில் கட்­டப்­பட்­டி­ருந்­தன.

இறந்த வித்­தி­யாவின் உடல் யாழ்ப்­பாண போதனா வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­துச்­செல்­லப்­பட்­டதன் பின் சட்ட வைத்­திய அதி­காரி உடற்­கூற்று பரி­சோ­தனை செய்­ததில், மர­ணத்­திற்­கான கார­ண­மாக மூளையில் இருந்து இரத்தம் வந்­துள்­ள­தா­கவும், உள்­ளாடை வாய்க்குள் அடைக்­கப்­பட்டு பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தனால் மூச்சுத் திணறி மரணம் அடைந்ததாகவும் வைத்­திய அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், சம்­பவம் நடை­பெற்ற இடத்­தி­லி­ருந்து கொலை செய்­யப்­பட்ட வித்­தி­யாவின் துவிச்­சக்­கர வண்டி உட்­பட பல்­வேறு பொருட்கள் மீட்­கப்­பட்­டன. அத்­துடன், வித்தியாவின் கொலையில் சந்­தேக நபர்­க­ளாக 9 பேர் கைது செய்­யப்­பட்­டனர் அவர்­க­ளது பெயரும் விலா­சமும்,

1) பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் அல்­லது சின்­னாம்பி, 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

2) பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் அல்­லது ரவி, 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

3) பூபா­ல­சிங்கம் தவ­குமார் அல்­லது செந் தில் 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

4) முகா­லிங்கம் சஜிந்­திரன், 10ஆம் வட்­டா ரம் புங்­கு­டு­தீவு

5) தில்­லை­நாதன் சந்­தி­ரகாந் அல்­லது சந்­திராஸ், 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

6) சிவா­தேவன் குகாந்தன் அல்­லது பெரி­யப்பன், 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

7) பழனி ரூப­சிங்கம் குக­நாதன் அல்­லது நிஷாந்தன், 155/10 தவ­சிங்­க­ராம மாவ த்தை

8) ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணா, 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

9) மகா­லிங்கம் சசிகுமார் அல்­லது குமார், 10ஆம் வட்­டாரம் புங்­கு­டு­தீவு

கேள்வி: இந்தக் வழக்கு விசா­ரணை தொடர்பில் போதி­ய­ளவு சான்­றுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­னவா?

பதில்: இடம்­பெறும் விசா­ர­ணை­க­ளுக்கு ஏதா­வது இடை­யூ­றுகள் ஏற்­ப­டக்­கூடும் என்­பதால், விசா­ரணை அதி­கா­ரிகள் பொது­வாக சாட்­சி­யங்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தில்லை.

மேலும், இந்த வழக்கில் புலன் விசா­ர­ணை­களை முதலில் நடத்­திய ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸாரும் ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸாரை வழி­ந­டத்­தி­ கட்­ட­ளை­க­ளை வழங்­கிய வட­மா­காண உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து இந்த வழக்கின் புலன்­வி­சா­ரணை, கொழும்பு புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திற்கு பார­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளமை முக்­கிய நிகழ்­வாகும் .

இந்த வழக்கில் முக்­கிய சான்­றாக மர­பணுச் சான்றை எடுத்­துக்­கொள்­ளலாம். சந்­தேக நபர்­களின் இரத்த மாதி­ரிகள், மர­பணு (DNA) பரி­சோ­த­னைக்­கா­கவும் அனுப்­பப்­பட்­டுள்­ளன. வித்­தி­யாவின் வழக்கில் அறிவு சார் சான்று என்று கூறப்­ப­டு­கின்ற மர­பணுச் சான்­றுகள் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றன.

ஒரு வழக்கை நிரூ­பிப்­ப­தற்­காக நேரடிச் சான்று, சூழ்­நிலைச் சான்­று­க­ளுடன் தற்­போது அறி­வுசார் சான்­றான மர­பணுச் சான்றும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது.

தற்­போதும் புலன் விசா­ரணை இடம்­பெற்று கொண்­டி­ருக்கும் பட்­சத்தில் வித்­தியா படு­கொலை தொடர்­பான சான்­றுகள் தொடர்பில் நான் அறிந்­தி­ருக்கும் முழு விப­ரங்­க­ளையும் வெளி­யி­டு­வது புலன்­வி­சா­ர­ணைக்கு பாத­க­மா­கலாம்

கேள்வி: பொது­மக்­களால் பிடிக்­கப்­பட்டு வேலணை பங்­களா பகு­தியில் பொலி­ஸா ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சுவிஸ் பிர­ஜை­யான ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் வெள்­ள­வத்­தையில் எவ்­வாறு கைது செய்­யப்­பட்டார்? அதன் பின்­னணி என்ன? இது தொடர்பில் நீங்கள் நீதி­மன்­றத்­திலும் ஒரு வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தீர்கள். இது தொடர்பில் விப­ரிக்­க­மு­டி­யுமா?

பதில்:
ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான மகா­லிங்கம் சசி­குமார் என்ற சுவிஸ் வதி­வாளர் வேலணை பங்­களா பகு­தியில் வைத்து பொது­மக்­களால் பிடிக்­கப்­பட்டு கட்­டி­வைக்­கப்­பட்டார். அந்த இடத்­திற்கு பிர­தி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் வரு­கை­தந்­துள்ளார்.

மேலும் பல அதி­கா­ரி­களும் அந்த இடத்­திற்கு வந்­துள்­ளனர். பொது­மக்கள் குறித்த சுவிஸ் வதி­வா­ளரை பொலி­ஸா­ரிடம் பாரம் கொடுப்­ப­தற்கு முனைந்­துள்­ள­போது, பிர­தி­ய­மைச்சர் விஜயகலா மகேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு சம்­பவ இடத்­திற்கு வரும்­படி தகவல் கொடுத்த போதிலும் மூன்று மணித்­தி­யா­லம் ­வரை பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு வர­வில்­லை­யென பிரதி­ய­மைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

ஒன்­ப­தா­வது சந்­தேக நபரை பொலி­ஸா­ரிடம் பாரம் கொடுப்­ப­தற்­கான பொறுப்பை தீவ­கத்தைச் சேர்ந்த பிர­ப­ல­மான சட்­டத்­து­றையைச் சேர்ந்த ஒருவர் ஏற்­றுள்ளார் எனவும் அவ­ரிடம் சந்தேக நபரை மக்கள் பாரம் கொடுத்­த­தா­கவும் வித்­தி­யாவின் தாயார் ஆங்­கில பத்­தி­ரி­கை­யொன்­றிற்கு வழங்­கிய செவ்­வியில் கூறி­யுள்ளார்.

ஆனால், பொலி­ஸா­ரிடம் பாரங்­கொ­டுக்­கப்­பட்­ட­தாக கூறப்­பட்ட சுவிஸ் குமார் எவ்­வாறு வெள்­ள­வத்­தைக்கு சென்றார் என மக்கள் கேள்வி எழுப்­பினர். தீவக மக்­களின் போராட்­டத்­தையடுத்து கொழும்பு வெள்­ள­வத்தை பகு­தியில் வைத்து மீண்டும் கைது செய்­யப்­பட்ட ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சுவிஸ் குமார் கொடி­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் பாரம் கொடுக்­கப்­பட்டார்.

கொடி­காமம் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்­து­வைக்­கப்­பட்ட ஒன்­ப­தா­வது சந்­தேக­நபர் தொடர்பில் கொடி­காமம் பொறுப்­ப­தி­காரி மேல­திக அறிக்கை ஒன்­றினை மே மாதம் 21ஆம் திகதி தாக்கல் செய்து ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யி­ருந்தார். அதன்­பின்னர் நீதி­மன்­றத்தின் பணிப்­பின்­பேரில் அவர் விளக்­க­ம­றி­ய லில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

கொடி­காமம் பொறுப்­ப­தி­காரி தாக்கல் செய்­தி­ருந்த மேல­திக அறிக்­கையை நோக்­கும்­போது, இந்த அறிக்கை ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சுவிஸ் குமாரை இந்த வழக்­கி­லி­ருந்து விடு­விக்கும் நோக்கத்துடன் தயா­ரிக்­கப்­பட்­ட­தாக அமைந்­துள்­ளது.

அவர் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையில், வித்­தி­யாவின் கொலை வழங்கில் சுவிஸ் குமா­ருக்கு எதி­ராக எந்­த­வி­த­மான சான்­று­களும் இல்­லை­யெ­னவும் மேலும், வழக்குச் சான்றுப் பொருளும் இல்­லை­யெ­னவும் அந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

அதேபோல், வேலணை பங்­களா சந்­தியில் பாரங்­கொ­டுக்­கப்­பட்ட சுவிஸ் குமார் எவ்­வாறு வெள்­ள­வத்தை சென்றார் என்ற கேள்­விக்கும் குறித்த அறிக்­கையில் எந்தப் பதிலும் தெரிவிக்கப்பட­வில்லை.

இவை அனைத்தும் அந்த அறிக்­கையில் திட்­ட­மிட்டு மறைக்­கப்­பட்­டுள்­ளன.

கடந்த முதலாம் திகதி இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­த­போது, பாதிக்­கப்­பட்ட குடும்­பத்தின் நலன் கருதி நான் சில விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்தேன்.

அதில் நான் முத­லா­வ­தாக நீதிமன்­றத்தில் முன்­வைத்து விடயம் ஒன்­ப­தா­வது சந்­தேக நபரை பாது­காக்கும் நோக்­கத்­தோடு பொலிஸார் சந்­தேக நப­ருக்கு சார்­பாக மேல­திக அறிக்­கை­யினை தாக்கல் செய்து நீதி­மன்றத்­தி­னையும் மக்­க­ளையும் திசை திருப்பும் வகையில் செயற்­பட்­டுள்­ளார்கள் என்ற விடயத்தை நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருந்தேன்.

இதனை நீதி­பதி உன்­னிப்­பாகக் கவ­னித்தார்.

இந்தச் சம்­ப­வத்­தி­லி­ருந்து விசே­ட­மாக ஒன்­ப­தா­வது சந்­தேக நபரை பாது­காக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­கின்­றன என்ற மக்­க ளின் சந்­தே­கத்­திற்கு கொடி­காமம் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் 21.-5-.2015ஆம் திகதி வெளியிடப்பட்ட மேல­திக அறிக்கையும் இதற்கு வலு­வூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

இதனை நான் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­மை­யை­ய­டுத்து, நீதி­பதி ஒன்­ப­தா­வது சந்­தேக நப­ரான சுவிஸ் குமார் பொது மக்­களால் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்படைக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து கொடி­காமம் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யினால் 21-.5-. 2015ஆம் திகதி வெளியிடப்பட்ட மேல­திக அறிக்­கை­மூலம் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய நாள்வரை முற்­று­மு­ழு­தான விசா­ரணை நடத்தி விசா­ர­ணையில் எவ­ரா­வது சட்­ட­ரீ­தி­யற்ற செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தால் அவர்­க­ளையும் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யும்­படி குற்றப் புல­னாய்வு அதி­கா­ரிக்கு கட்­ட­ளை­யிட்டார்.

நீதி­ப­தியின் உத்­த­ர­விற்­க­மைய தற்­பொ­ழுது விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன.

கேள்வி: இணை­யத்­த­ளங்­க­ளிலும், சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் குற்­ற­வா­ளி­க­ளுக்­கான தண்­ட­னைகள் குறித்து தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்பில் உங் கள் கருத்து என்ன?

பதில்: மாணவி வித்­தியா படு­கொலை செய்­யப்­பட்டு மூன்று வாரங்­களைக் கடந்­துள்ள நிலையில் புலன்விசா­ர­ணைகள் முழு­மை­யாக நிறை­வ­டை­யா­மலும், பொலி ஸார் தமது விசாரணை­களை நிறைவு செய்­யா­மலும் இருக்­கின்­றார்கள்.

ஒரு­வ­ழக்கின் தீர்ப்பு எப்­பொ­ழுது வரும் என்றால், புலன் விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்டு, அந்த விசா­ரணை முடிவை பொலிஸார் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி, சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் ஆய்வு செய்­யப்­பட்டு அதன் பின்னர் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட வேண்டும்.

அந்தக் குற்­றப்­பத்­திரம் நீதி­மன்­றத்­திற்கு வந்­த­பின்னர் அது­தொ­டர்பில் வழக்கு விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு நீதி­மன்­றத்­தினால் சந்­தேக நபர்­களின் குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே தண்­டனை விதிக்க முடியும்.

ஆனால், தற்­போது சில இணை­யத்­த­ளங்­களில், ஐவ­ருக்கு மரண தண்­ட­னையும் ஏனை­ய­வர்­க­ளுக்கு 10 தொடக்கம் 30 வருட சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­பட வேண்டும் என்றும் செய்திகள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. இது மிகவும் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது.

இவ்­வா­றான ஒரு சூழலில் பொது­மக்கள் மத்­தியில் தவ­றான சட்­ட­ரீ­தி­யற்ற விட­யங்­களை முன்­வைப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. இதனால் மக்கள் குழப்­ப­ம­டைந்­துள்­ளார்கள். ஐந்து பேருக்கு மாத்திரம் மரண தண்­ட­னையா? என்று கேட்­ப­வர்­களும் இருக்­கின்­றார்கள்.

எனவே, சந்­தே­க­ந­பர்­க­ளுக்­கான தண்­ட­னை­யினை குற்­றச்­சாட்­டுக்கள் நிரு­பிக்­கப்­பட்ட பின்னர் நீதி­மன்­றத்தால் மாத்­தி­ரமே விதிக்க முடியும்.

கேள்வி: சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யான நீங் கள் உங்கள் அனு­ப­வத்­திற்­க­மைய எவ்­வா­றான தீர்ப்பு வழங்­கப்­படும் என்று கரு­து­கின்­றீர்கள்? விசேட நீதி­மன்றம் அமைத்து விசா­ரணை நடத்­த­மாறு ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். இது எந்த அள­விற்கு சாத்­தி­ய­மா­கும?

பதில்: வழ­மை­யான வழக்­குகள் போன்று புலன்­வி­சா­ரணை உட்­பட ஏனைய படி­மு­றை­களை செய்யும் போது கால­தா­மதம் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது.

ஆனால், வித்­தி­யாவின் படுகொலை தொடர்­பான வழக்­கா­னது, இந்த நாட்டில் சட்­ட­மி­ருக்­கின்­றது, அது விரை­வாக செயற்­பட வேண்டும் என்ற மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும் என்­ப­தற்­காக விசேடமான சில செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்தும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. புங்­கு­டு­தீவில் இது மூன்­றா­வது சம்­ப­வ­மாக இடம்­பெற்­றுள்­ளது. எனவே இதற்கு ஒரே­வழி குற்றவாளி­க­ளுக்­கான தண்­ட­னை­யினை விரை­வாக வழங்க வேண்டும்.

இதன்­மூலம் இந்த நாட்டில் இவ்­வா­றான குற்றச் செயல்கள் இடம்­பெ­றாமல் குறைக்­க­மு­டியும். தண்­டனை கடு­மை­யா­கவும் விரை­வா­கவும் இருந்தால் குற்றச் செயல்­களை குறைக்­க­மு­டியும். மக்­க­ளுக்கு சட்­டத்­தின்­மீது நம்­பிக்கை ஏற்­ப­ட­வேண்­டு­மாயின், தண்­ட­னைகள் விரை­வாக வழங்­கப்­பட வேண்டும்.

தற்­போ­தைய சூழலில் இந்தச் சம்­பவம் தொடர்பில் மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து ஜனா­தி­பதி விசேட நீதி­மன்­றத்­தினை அமைத்து விசா­ர­ணை­களை விரை­வு­ப­டுத்­து­வ­தாகக் கூறி­யுள்ளார். நீதி­மன்ற நடை­மு­றைகள் என்று எடுத்­துக்­கொண்டால், இதில் மூன்று விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன.

(1) கொலை வழக்கு ஒன்று சம்­பவம் நடை­பெற்ற இடத்தில் நியா­யா­திக்­கம்­முள்ள மேல் நீதி­மன்­றத்­தி­லேயே நடை­பெறும்.

பொலி­ஸாரால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு விசாரணைகளின் முடிவில் வழக்­குக்­கோவை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பப்­பட்டு பின்னர் சட்­டமா அதி­ப­ரினால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு, வழக்கு விசா­ரணை நடை­பெற்று மேல் நீதி­மன்றம் தண்­டனை வழங்கும். இதற்கு சாதா­ரண நடை­மு­றையின் பிர­காரம் கால தாம­த­மாகும்

(2) விசேட நீதி­மன்றம் என்றால் வழக்­கு­களை விசா­ரித்துக் கொண்­டி­ருக்கும் நீதி­மன்­றங்­களில் ஒரு நீதி­மன்­றத்­தினை விசே­ட­மாக ஒரு வழக்கை மாத்­திரம் விசா­ரணை செய்­வ­தற்­காக விசேட அமர்­வாக நீதி­பதி அல்­லது நீதி­ப­தி­களை நிய­மித்து வழக்­கினை விசா­ரணை செய்­வ­தாகும்.

ஏற்­கெ­னவே இவ்­வா­றான நடை­முறை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு விசேட நீதி­மன்றம் அமைக்­கப்­பட்டு கொழும்பு முத­லா­வது நீதி­மன்­றத்தில் அந்த வழக்­குகள் விசா­ரிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. அதா­வது, குறித்த வழக்கை துரி­தப்­ப­டுத்தும் செயற்­பா­டா­கவே இது அமையும்.

ஆனால் இதனை புரிந்­து­கொள்­ளாத சட்ட ரீதி­யான அனு­பவம் இல்­லாத பொது­பல சேனாவைச் சேர்ந்­த­வர்கள் இது தொடர்பில் தவ­றான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

வடக்கில் இடம்­பெற்ற பிரச்­சி­னைக்கு மாத்­திரம் ஏன் விசேட நீதி­மன்றம் அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

இது வடக்கா? தெற்கா? என்­பதில் பிரச்­சினை இல்லை. சமூ­கத்தில் இடம்­பெற்ற மனி­த­நேயம், சட்டம் தொடர்­பான பிரச்­சி­னை­யாகும். பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வடக்கில் இருக்­கலாம் தெற்கிலும் இருக்கலாம்.

விசேட நீதி­மன்றம் என்றால் என்ன என்­பதைப் புரிந்து கொள்ள முடி­யா­ம­லேயே பொது­பல சேனா இந்த கருத்தை வெளி­யிட்­டுள்­ளது. சட்­டத்தைப் பற்றி எதுவும் தெரி­யாமல் அறிக்கை விடு­வது மிகவும் பார­தூ­ர­மான செய­லாகும்.

(3) நீதி ஆயம் (TRIAL AT BAR) ஒன்றை அமைத்து தீர்ப்பு வழங்கும் செயற்­பா­டாகும். இந்த நீதி ஆயம் என்­பது என்­ன­வென்று நோக்­கும்­போது, தண்­டனைச் சட்­டக்­கோவை 450(2) ஆம் பிரிவின் கீழ் இந்த நீதி ஆயம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நீதி ஆயம் மூன்று மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களை நிய­மித்து அந்த மூன்று நீதி­ப­திகள் முன்­னி­லையில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் செயற்­பா­டாகும். இதன்­மூலம் விரை­வாக வழக்கை நிறைவு செய்ய முடியும். இவ்­வாறு பல வழக்­குகள் இடம்­பெற்­றுள்­ளன.

குற்­றத்தின் தன்­மை­யி­னையும் சூழ்­நி­லைக்கும் ஏற்ப பிர­தம நீதி­ய­ர­சர்தான் இந்த நீதி ஆயத்தை அமைக்க வேண்டும். என்­னு­டைய கணிப்­பின்­படி வித்­தி­யாவின் வழக்­கிற்கு நீதி ஆயம்தான் நிய­மிக்­கப்­படும் என்று நான் கரு­து­கின்றேன்.

நீதி ஆயம் அமைத்தால் விரை­வாக இந்த வழக்­கினை நிறைவு செய்ய முடியும். கிரு­சாந்தி கொலை வழக்­கிலும் ஜோன் ரீட்டா கொலை வழக்­கிலும் எதி­ரி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­தேக நபர்­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுடன் மேல­திக விசா­ர­ணையில் இன்னும் சிலர் கைது செய்­யப்­ப­டலாம் இந்த சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சான்­று­களின் அடிப்­ப­டையில் கொலை, குளு­வாக பாலி­யல்­வன்­பு­ணர்வு, கடத்தல், சட்­ட­ரீ­யற்ற ஒன்­று­கூடல், சித்­தி­ர­வதை, சதி­செய்­த­மை­யென பல குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டலாம்

கேள்வி: இந்த வழக்கு மே மாதம் 21 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, நீதி­மன்றம் வழங்­கிய கட்­ட­ளை­களை விப­ரிக்க முடி­யுமா?

பதில்: நீதி­பதி ஆறு கட்­ட­ளை­களை வழங்­கி­யி­ருந்தார். முத­லா­வ­தாக, கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் புலன் விசா­ர­ணையில் மிகவும் முக்­கிய சான்­றாகக் கரு­தப்­ப­டு­வது அவர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சிகள்.

கைய­டக்கத் தொலை­பே­சி­களை பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும்­போது, குறித்த சந்­தேக நபர்கள் வித்­தி­யாவின் உடல் மீட்­கப்­பட்ட இடத்­தி­லி­ருந்து யாரை­யெல்லாம் தொடர்பு கொண்­டார்கள் என்ற விட­யங்­களை அறி­வது மிகவும் இல­கு­வா­ன­தாகும்.

இவ்­வாறு செயற்­பட்டால் இந்த விசா­ர­ணை­களில் மிகவும் முக்­கி­ய­மான சாட்­சிகள் உள்­வாங்­கப்­படும். எனவே, இதனை செய்­யு­மாறு நீதி­பதி பணித்­தி­ருந்தார். இதனை தாங்கள் செயற்­ப­டுத்தி வரு­வ­தா­கவும். விரைவில் கைய­டக்கத் தொலை­பேசி அழைப்­பு­களை பரி சோதித்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தாக பொலிஸார் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தனர்.

அத்­துடன், சந்­தேக நபர்­க­ளு­டைய இரத்த மாதி­ரி­களை எடுத்து, அதனை சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கு அனுப்பும் படியும் நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

கொல்­லப்­பட்ட மாணவி வித்­தி­யாவின் உடலை பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கை­யின்­படி, வித்­தி­யாவின் வாயிலே அவ­ரது உள்­ளா­டையை அடைத்­ததால், மூச்சுத் திணறல் ஏற்­பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்­பட்­டதால் அவர் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்­டுள்­ளது.

மேலும் வாயில் அடைத்த உள்­ளாடை வயிற்­றுக்குள் சென்­றுள்­ளதும் தெரியவந்துள்­ளது. அந்த உள்­ளா­டை­யினை பரி­சோ­த­னைக்கு அனுப்­பும்­ப­டியும் நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

மேலும், ஒன்­ப­தா­வது சந்­தே­க­நபர் வங்கி ஒன்றில் பணப்­ப­ரி­மாற்றம் செய்­துள்ளார். அத­னையும் பரி­சோ­திக்­கு­மாறும் நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார். இந்த கட்­ட­ளைகள் உட்­பட ஆறு கட்­ட­ளை­களை நீதி­மன்றம் பணித்­துள்­ளது.

ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸாரும் யாழ்ப்­பாணப் பொலி­ஸாரும் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். ஒன்­ப­தா­வது சந்­தே­க­நபர் தொடர்பில் பொலிஸார் மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட சந்­தே­கமும் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களும் விசா­ரணை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.

இப்­பொ­ழுது வித்­தி­யாவின் கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் மேற்­கொண்டு வரு­கின்­றனர். குற்றப் புல­னாய்வு பொறுப்­ப­தி­காரி நிசாந்த சில்வா தலைமையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீதி நிலை நாட்டப்பட வேண்டுமாயின், நாம் உணர்வு ரீதியாக செயற்படாமல் அறிவு ரீதியாக செயற்படவேண்டியதும் நாம் பொறுமைகாக்க வேண்டியதும் காலத் தின் கட்டாயமாகும்.


Share.
Leave A Reply

Exit mobile version