சென்னை: காதல் இல்லை இல்லவே இல்லை என்று என்னதான் தொடர்ந்து மறுத்து வந்தாலும் வெளிவருகின்ற விஷயங்களை வைத்துப் பார்த்தால், கல்யாணம் முடிந்தது என்ற தகவல் உண்மைதானோ என்று நினைக்க வைக்கிறது.
கோடம்பாக்கத்தின் தற்போதைய அதிகபட்ச கவனத்தை பெற்றிருக்கிறார்கள் நயனும்- சிவனும் என்ன புரியலையா நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தான் அந்த ஜோடி. நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போதே இருவரும் காதலிக்கிறார்கள், ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று வெளிவந்த செய்திகளை தொடர்ந்து காட்டமாக மறுத்து வந்தார் நயன்தாரா.
ஆனால் படப்பிடிப்பின் கடைசி நாளில் இருவரும் இணைந்து நெருக்கமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தனர்.இந்தப் புகைப்படம் அனைவரும் பார்க்கப்படும் வகையில் சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்யப்பட்டு இணையத்தில் வைரல் ஆகும் அளவுக்கு ஷேர் செய்யப்பட்டது.
தற்பொழுது வெளியான புகைப்படங்களைப் பார்த்தால், இருவரும் காதலிக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆமாம் இருவரும் கேரவனுக்குள் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துள்ளனர். தற்போது இணையத்தை வைரல் ஆக்கிக் கொண்டிருக்கின்றன இந்தப் புகைப்படங்கள்.