அது கடந்த 6 ஆம் திகதி சனிக்­கி­ழமை. புத்­தளம் நகரில் உள்ள கணினி வகுப்­புக்கு சென்றாள் திலுக்சி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). புத்­தளம் – கல்­லடி, போதி­ரா­ஜ­பு­ரவை சேர்ந்த திலுக்­சிக்கு 17 வயது தான் ஆகின்­றது.

அன்று காலை பல்­வேறு கன­வு­க­ளுடன் கணினி வகுப்­புக்கு சென்ற திலுக்­சிக்கு தான் காமு­கர்­களின் கோரப் பசிக்கு ஆளாகப் போகின்றோம் என்­பது தெரிந்­தி­ருக்க வாய்ப்பே இல்லை.

காலையில் கணினி வகுப்­புக்கு சென்ற திலுக்சி, வகுப்பு முடிந்­ததும் வீட்­டுக்கு வரத் தயா­ரான போதுதான் அந்த இடத்­துக்கு சமன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) மோட்டார் சைக்­கிளில் வரு­கின்றான்.

சமனை திலுக்­சிக்கு ஏற்­க­னவே தெரியும். ஏனெனில் அவன் திலுக்­சியின் காதலன் என நம்­பப்­ப­டு­பவன். சமனும் வட்­ட­சாட்­ட­மான உரு­வத்தைக் கொண்­டவன்.

திலுக்சி வகுப்பு முடிந்து வீட்­டுக்கு செல்ல தயா­ரா­னதை கண்ட அவன் தனது மோட்டார் சைக்­கிளில் வரு­மாறும் வீட்­டுக்கு செல்ல முடியும் எனவும் திலுக்­சி­யிடம் கூறி­யுள்ளான்.

தெரிந்­த­வர்­தானே என்ற நம்­பிக்­கையில் வீட்­டுக்கு செல்­வ­தற்­காக மோட்டார் சைக்­கிளில் ஏறிய திலுக்சி, வீட்­டுக்கு கூட்டிச் செல்­லப்­ப­ட­வில்லை. புத்­தளம் களப்பு பிர­தே­சத்தில் உள்ள ஒரு பாழ­டைந்த இடத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்ளாள்.

அங்கு வைத்துதான் திலுக்­சியின் எதிர்­கா­லமே கரு­கிப்­போ­னது.

இந் நிலையில் தனது மகள் காலையில் வகுப்­புக்கு சென்று இன்னும் வீடு­தி­ரும்­ப­வில்­லையே என்ற ஏக்­கத்­துடன் மாலை­யாகும் போது திலுக்­சியின் தந்தை தேடலை ஆரம்­பிக்­க­லானார்.

அப்­போது கணினி வகுப்புப் பக்கம் சென்ற அவர் தனது மகள் தொடர்பில் விசா­ரித்­துள்ளார்.

‘ அங்கிள் திலுக்சி வகுப்பு முடிந்­த­துமே சமன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர்கள் களப்பு பகு­தியை நோக்கி செல்­வதை கண்டோம் ‘ என திலுக்­சியின் தந்­தைக்கு தெரிந்­த­வர்கள் பலர் தகவல் கொடுத்­துள்­ளனர்.

இதனை தொடர்ந்து களப்புப் பகு­திக்கு சென்ற திலுக்­சியின் தந்தை தனது மகள் மயக்­க­ம­டைந்த நிலையில் களப்பு பகு­தியில் தனி­மையில் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என அனுமானிக்கத் தக்க அடை­யா­ளங்­க­ளுடன் வீழ்ந்­து­கி­டப்­பதை அவ­தா­னித்­துள்ளார்.

உட­ன­டி­யாக மகளை மீட்டு புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்ற திலுக்­சியின் தந்தை சமனுக்கு எதி­ராக புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றை பதிவு செய்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் சமனை நேற்று மாலை வரை கைது செய்ய முடி­ய­வில்லை.

அவன் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவனைத் தேடி முழு அளவிளான விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந் நிலையில் சமன் தான் திலுக்­சியை பலாத்­காரம் செய்­து­விட்டு தப்பிச் சென்று விட்டான் என்ற தந்தையின் முறைப்­பாட்­டுக்கு மேல­தி­க­மாக இது ஒரு சமூக அல்­லது கூட்டு பாலியல் பலாத்­காரம் என்­பதை புத்­தளம் வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி போட்­டு­டைத்தார்.

திலுக்­சியை பரி­சோ­தனை செய்த புத்­தளம் பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி, அவ­ளது உடலில் ஏற்பட்டி­ருந்த காயங்கள் மற்றும் அவ­தா­னிக்­கத்­தக்க சில தட­யங்­களை வைத்து கூட்டு பாலியல் பலாத்­காரம் தொடர்­பி­லான அனு­மா­னத்­துக்கு வந்து அது தொடர்­பில் சிகிச்சைப் பெற்­று­வந்த திலுக்சியிடம் பக்­கு­வ­மாக விபரம் பெற­லானார்.

இதன் போதுதான் இந்த கூட்டு பலாத்­காரம் தொடர்­பி­லான தக­வல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

மூவர் திலுக்­சியை சுமார் 10 தட­வை­க­ளுக்கும் மேல் வன்­பு­ணர்ந்­துள்­ளமை சட்ட வைத்­திய அதிகாரியினூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்டு அது தொடர்பில் புத்­தளம் பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்கப்பட்­டது.

இந் நிலையில் சம­னுக்கு எதி­ராக மட்டும் கொடுக்­கப்­பட்­டி­ருந்த முறைப்­பாட்டில் சந்­தேக நபர்­களின் பட்­டியல் நீண்­டது. பொலிஸார் திலுக்­சி­யிடம் விசேட வாக்கு மூலம் ஒன்றை சிறுவர் மகளிர் பிரிவினூடாக பெற்­றுக்­கொண்­டனர்.

‘ ஆம், நான் சம­னுடன் களப்பு பகு­திக்கு சென்றேன். அங்கு இரு­வரும் ஒன்­றாக இருந்தோம். அப்­போது இருவர் அங்கு வந்­தனர்.

அவர்கள் நானும் சமனும் ஒன்­றாக இருந்த காட்­சியை பட­மாக்­கி­யுள்­ள­தா­கவும் அதனை இணை­யத்தில் கசி­ய­விடப் போவ­த­ாகவும் எம்மை மிரட்­டினர்.

அப்­போது சமன் என்னை தனி­மையில் விட்­டு­விட்டு தனது வேலை முடிந்­தது என தப்பி ஓடி­விட்டான். நான் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டேன்.

அப்­போது அந்த இரு­வரும் மாறி மாறி என்னை 10 தட­வை­க­ளுக்கும் மேல் வன்­பு­ணர்ந்­தார்கள். பின்னர் என்னை அங்­கேயே விட்­டு­விட்டு சென்­று­விட்­டனர்.

நான் எது­வுமே செய்ய முடி­யாத நிலையில் சக்­தி­யற்­ற­வ­ளாக வீழ்ந்து கிடந்த போது தான் மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளேன்.’ என தனக்கு நேர்ந்­ததை பொலி­ஸா­ரிடம் விப­ரித்தாள் திலுக்சி.

இந்த வாக்குமூலத்­தை­ய­டுத்து உஷா­ர­டைந்த பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். சம்பவத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் மூவரை கைது செய்­தனர்.

சப்ராஸ், ஹஸீம் மற்றும் அனீஸ் (பெயர்கள் மாற்றப்­பட்­டுள்­ளன) ஆகிய புத்­தளம் பகு­தியைச் சேர்ந்­த­வர்­க­ளையே இவ்­வாறு பொலிஸார் கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நப­ரான ஹஸீமின் கைய­டக்கத் தொலை­பே­சியில் இருந்து அவன் பட­மாக்­கி­ய­தாக கூறப்­படும் வீடி­யோ­வையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

தெளி­வற்­ற­தாக இருக்கும் அந்த வீடியோ காட்­சிகள் தற்­போது பொலி­ஸாரின் கைகளில் உள்­ளன.

இந் நிலையில் கைது செய்­யப்­பட்ட மூன்று சந்­தேக நபர்­களும் புத்­தளம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்படுத்­திய நிலையில் அவர்­களில் ஒருவன் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு விடுதலை செய்­யப்­பட்­டுள்ளான்.

ஹஸீம், அனீஸ் ஆகிய இரு சந்­தேக நபர்­களும் தொடர்ந்தும் 17 ஆம் திகதி வரை விளக்­க­மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அன்­றைய தினம் அவ்­வி­ரு­வரும் அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர்.

அத்­துடன் சமனை தேடிபொலிஸ் வேட்­டையும் தொடர்­கின்­றது. (சம்­பவம் பொலிஸ் தக­வல்­களின் படி எழு­தப்­பட்­டது )

யாழ்.புங்­கு­டு­தீவு பிர­தே­சத்­தில் 17 வய­தான மாணவி வித்­தியா கூட்டு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்படுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டதன் பின்னர் பாலியல் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கவும் வித்தியா போன்ற யுவ­தி­களை காக்கும் வித­மா­கவும் நாட­ளா­விய ரீதியில் பேர­ணிகள் ஆர்ப்­பாட்­டங்கள் விழிப்­பு­ணர்வு நடவ­டிக்­கைகள் இடம்­பெற்ற போதும் என்­று­மில்­லாத வகையில் இலங்­கையின் அனைத்து பாகங்­க­ளிலும் பாலியல் வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்­ளன.

குறிப்­பாக வித்­தி­யாவின் கொடூர கொலைக்கு பின்னரும் கூட புத்­தளம் திலுக்சி வரை எத்­த­னையோ யுவ­திகள் சிறு­மிகள் இவ்வாறு கெடூரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.

வவு­னியா, புத்­தளம், அனு­ரா­த­புரம், குரு­ணாகல், மாத்­தறை, கண்டி, ஹம்­பாந்­தோட்டை என மாவட்ட ரீதியில் அதன் பட்­டியல் நீண்டுள்ளது.

இந்த பாலியல் சார்ந்த குற்­றங்­களைத் தடுக்க சமூக மட்­டத்தில் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்கப்பட வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து அனைத்து தரப்­பி­ன­ராலும் உணரப்பட்டுவரும் நிலையில் சட்ட ரீதி­யி­லான பாது­காப்பு தன்மை குறித்து பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர், சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர கேச­ரி­யுடன் கருத்­துக்­களை பகிர்ந்­து­கொள்­கின்றார்.

சட்­டத்தைப் பொறுத்­த­வரை சிறுவர் குற்­றங்கள் தொடர்பில் இரு ஏற்­பா­டுகள் உள்­ளன.

ஒன்று துஷ்­பி­ர­யோகம். மற்­றை­யது சிறுவர்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் அத்­து­மீ­றல்கள்.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்ற சொல் பரந்­த­தாக இருந்­தாலும் இது சிறு­வர்கள் மீதான பாரிய குற்றங்களை குறித்­து­க்காட்­டு­கின்­றது.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் எனும் போது தண்­டனை சட்டக் கோவையின் கீழ் 12 பிர­தான விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக 16 வய­துக்கு கீழ்ப்பட்ட அனை­வரும் சிறு­வ­ராக கரு­தப்­படும் நிலையில் பிர­தான 12 குற்றங்கள் தொடர்பில் சில உதா­ர­ணங்­களை குறித்துக் காட்­டலாம்.

சிறு­வர்­க­ளிடம் பாலியல் ரீதி­யாக பிர­யோ­ஜ­னங்­களைப் பெறல், பிள்­ளை­களை விற்­பனை செய்தல், யாசகம் எடுக்க செய்தல் போன்­றன அவற்றில் அடங்கும்.

இந்த 12 குற்­றங்­க­ளிலும் சில நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலேயே தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்­ப­துடன் மேலும் பல மேல் நீதி­மன்­றமே விசா­ரணை செய்து தீர்ப்பு வழங்கும்.

குறிப்­பாக இன்று சிறுவர் துஷ்­பி­ர­யோ­கத்­தோடு சேர்த்து பார்க்­கப்­படும் மற்­றொரு விவ­கா­ரமே பாலியல் பலாத்­கா­ர­மாகும்.

16 வய­துக்கு கீழ்­பட்ட ஒரு­வரை அவ­ரது விருப்­பத்­து­டனோ அல்­லது விருப்­ப­மில்­லா­மலோ பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­வது ………. பாலியல் குற்றம் என கரு­தப்­ப­டு­கின்­றது.

போதிய சாட்­சி­யங்கள் இருப்பின் அது தொடர்பில் நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணைகள் இன்றி நேர­டி­ய­ாகவே மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று தண்­டனைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.

16 வய­துக்கு மேற்­பட்ட ஒரு­வரை அவ­ரது விருப்­ப­மில்­லாமல் பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோகம் செய்­வது பாலியல் பலாத்­கா­ர­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

இப்­ப­டி­யான பலாத்­கா­ரங்கள் தொடர்பில் இலங்கையின் சட்­டத்தின்­படி 20 வரு­டங்கள் வரை சிறைத் தண்­டனை விதிக்க முடியும். இதுதான் சட்ட ரீதியில் உள்ள நிலைமை என்­கிறார் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர.

ஒரு சிறுமி அல்­லது யுவதி அல்­லது பெண் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­படும் போது கிளர்ந்­தெழும் நாம் மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெறக் கூடாது என்­ப­தற்­காக ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­து­கின்றோம்.

பெண்கள் சிறு­வர்கள் தொடர்­பி­லான பாது­காப்பு குறித்த ஐ. நா. சபையின் ஏற்­பா­டுகள் தொடர்பில் இலங்கை ஒரு­மித்­துள்ள நிலையில் அதன் சட்ட திட்­டங்­களின் பிர­காரம் சிறுவர் பெண்கள் தொடர்பிலான  அதி­கார சபை, தனி­யான பொலிஸ் பிரிவு மற்றும் ஒவ்­வொரு பொலிஸ் நிலை­யத்­திலும் ஒரு பிரத்­தியேக பிரிவு என சிறுவர், பெண்கள் பாது­காப்பு தொடர்பில் ஏற்­பா­டுகள் இருந்த போதும் இன்­றுள்ள இலங்­கையின் நிலைமை கவலைக் கொள்ளச் செய்­கின்­றது.

சுருங்கச் சொல்­வ­தாயின் பாலியல் குற்­றங்­களால் இலங்கை திண­று­கின்­றது எனலாம். அந்­த­ள­வுக்கு குற்­றங்கள் அதி­க­ரித்­து­விட்­டன.

யுவ­திகள், சிறு­வர்கள் மீது நாட்டில் இடம்­பெறும் பாலியல் வன்­மு­றைகள் தொடர்பில் ஆராயும் போது அவற்றில் 80 சத வீத­த்துக்கும் மேலானவை அவர்களது சூழலிலேயே அவர்களுக்கு நெருக்கமானவர்களினாலேயே புரியப்படுகின்றன.

இந் நிலைமையானது மிகவும் பயங்கரமானதாகும். இதனைவிட யுவதிகளில் பலர் அவர்களின் காதல் தொடர்புகள் மற்றும் அறிமுகமற்றவர்களின் தொடர்புகள் காரணமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

அவ்வாறானதொரு நிலையில் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொறுப்பை

நாம் வெறுமனே பொலிஸார் மீது மட்டும் சுமத்திவிட முடியாது. அது தொடர் பிலான காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய பொருப்பு சமூகம் சார்ந்தவர்கள் மீதும் உள்ளது.

பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தி சிறந்த சமூகம் ஒன்றை ஏற்படுத்த பொலிஸாருடன் இணைந்து சமூக மட்டத்திலும் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது போனால் நாளைய நாள் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் இதனைவிட ஆபத்தான நாளாக அமையும்.

அப்படி அமைந்தால் நாம் இன்னும் பல வித்தியாக்களை இழக்க வேண்டி ஏற்படும். அதற்கு முன்னர் கத்திரமான நடவடிக்கைகள் உடன் அவசியமானதாகும்.

-எம்.எப்.எம் பஷீர்-

Share.
Leave A Reply

Exit mobile version