லண்டன் நகரில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வுத் திட்டம் குறித்தோ சர்­வ­தேச விசா­ரணை குறித்தோ லண்­டனில் புலிகள் இயக்­கத்தின் மீதான தடையை நீக்குவது தொடர்­பா­கவோ பேச­வில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்­திரன்  தெரி­வித்தார்.

ITI-london-Meeting1பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் லண்­டனில் புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் இர­க­சியப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தாக வெளி­யான செய்­தியையடுத்து பல்­வேறு கருத்து முரண்­பா­டு­களும் கேள்விக் கணை­களும் அர­சியல் மட்­டத்தில் எழுந்து வரு­கின்­றன.

இது குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­விக் ­கையில்,

லண்­டனில் புலம்­பெயர் அமைப்­புக்­க­ளுடன் இடம்­பெற்ற சந்­திப்பின் போது முக்­கி­யமாக கடந்த ஜனாதிபதித் தேர்­த­லுக்குப் பின்னர் வட கிழக்கு மக்­க­ளுக்கு செய்­ய­வேண்­டிய உட­னடித் தேவை­களை நிறை­வேற்­று­வதில் ஏற்­பட்­டுள்ள கால­தா­ம­தங்­களை எவ்­வாறு நீக்­கு­வது மற்றும் அப்­ப­கு­தி­களில் மீள்கட்­ட­மைப்­புக்கு புலம்­பெயர் அமைப்­புக்­களின் உத­வி­களை எவ்­வாறு பெற்­றுக்­கொள்­வது போன்ற விட­யங்கள் ஆரா­யப்­பட்­டன.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ர­ணையை கொண்டு வர­வேண்டும் என்­பதில் நான் எவ்­வ­ளவு தூரம் ஈடு­பாடு கொண்­டி­ருந்தேன் என்­பது கூட்­ட­மைப்­பி­லுள்ள ஏனைய உறுப்­பி­னர்­களை விட சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னுக்கு நன்­றாக தெரியும்.

அம்­மு­யற்­சி­களை நாம் மேற்­கொண்ட போது சர்­வ­தேச நாடு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய போது எடுத்துக்கூ­றிய வேளையில் எல்லாம் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் என்­னுடன் உடன் இருந்­தி­ருக்­கிறார்.

இவை­யெல்­லா­வற்­றையும் தெரிந்து கொண்டே போர்க்­குற்ற விசா­ர­ணையை மழுங்­க­டிப்­ப­தற்­காக, லண்டன் பேச்­சு­வார்த்­தைக்கு நான் போயுள்ளேன் என அவர் சந்­தேகம் கொள்­வது மிக­மிக விசித்திரமான ஒரு கூற்­றாகும்.

அவர் இவ்­வாறு கூறி­ய­தற்­கு­ரிய காரணம் என்­ன­வென்று எனக்குத் தெரி­ய­வில்லை. தேர்தல் அண்­மிப்­பது ஒரு கார­ண­மாக இருக்­க­லா­மென நான் கரு­து­கிறேன்.

இப்­பேச்­சு­வார்த்தை பற்றி விமல் வீர­வன்ச தென்­னி­லங்­கையில் நாட்டை பிரித்­தெ­டுப்­ப­தற்­காக மங்­கள சம­ர­வீ­ரவும் சுமந்­தி­ரனும் வெளி­நாடு போய் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­விட்டு வந்­தி­ருக்­கின்­றார்கள் என பொய் பிர­சாரம் செய்து கொண்­டி­ருக்­கிறார்.

மறு­புறம் எதிர்க்­கட்சி தலை­வரோ புலிகள் மீதான தடையை நீக்­கவே இவர்கள் வெளி­நாடு சென்றார்களா என பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

ஆகவே தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல விட­யங்­களை இர­க­சி­ய­மா­கவே செய்து வந்­துள்­ளது. இந்த விடயம் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் அனை­வ­ருக்கும் தெரியும்.

குறிப்­பாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் மேற்­கொள்­ளப்­படும் தீர்­மா­னங்கள் சம்­பந்­த­மாக பல சந்திப்­புக்கள், பேச்­சு­வார்த்­தைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தா­மலே நடை­பெற்று வந்­துள்­ளன.

இவை­யெல்­லா­வற்­றையும் தெரிந்து கொண்டு என் மீது குற்­றச்­சாட்டை முன்­வைப்­ப­தற்கு, நெருங்­குகின்ற தேர்தல் தான் கார­ண­மாக இருக்­க­லா­மென நினைக்கத் தோன்­று­கின்­றது.

லண்­டனில் நடந்த பேச்­சு­வார்த்­தைகள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­டாத பேச்­சு­வார்த்­தை­க­ளாக இருக்க வேண்டும் என்­ப­துதான் எமது நோக்­க­மாக இருந்­தது.

தற்­பொ­ழுது தென்­னி­லங்­கையில் எழுந்­தி­ருக்­கின்ற சர்ச்­சை­யி­லி­ருந்து இது புரிந்­தி­ருக்கும். விமல் வீரவன்ச, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் சுமந்­தி­ரனும் லண்­ட­னுக்கு சென்று நாட்டை எவ்­வாறு பிரிப்­ப­தென்று புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வந்திருக்கின்றார்கள் என இன­வா­தத்தை கக்­கி­யுள்ளார்.

கடந்த வியா­ழ­னன்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா, விடு­தலைப் புலிகள் மீதான தடையை நீக்­கவா? லண்டன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது என வினாவெழுப்பி­யி­ருந்தார்.

நாங்கள் மேற்­படி லண்டன் பேச்­சு­வார்த்­தையை ஏற்­பாடு செய்­த­போது சர்­வ­தேச விசா­ரணை பற்­றியோ உள்­நாட்டு பொறி­முறை பற்­றியோ பேசு­வ­தற்கு இச்­சந்­திப்பை ஒழுங்கு செய்­ய­வில்லை. அது­வு­மன்றி அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக பேசு­வ­தற்கும் நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இப்­பேச்­சு­வார்த்­தையின் முக்­கியம், வட கிழக்கில் வாழு­கின்ற தமிழ் மக்­க­ளு­டைய உட­னடிப் பிரச்சினைகள், தேவைகள் சம்­பந்­த­மா­ன­வை­யா­கவே இருந்­தது.

அதிலும் குறிப்­பாக நிலங்கள் விடு­விக்­கப்­படும், அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என்று அர­சாங்கம் அளித்த வாக்­கு­று­தி­களை முன்­னெ­டுப்­ப­திலே மிகுந்த தாமதம் ஏற்­பட்டு கொண்­டி­ருப்­பது அனை­வரும் அறிந்த விடயம்.நிலங்­களை விடு­விப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்­டது.

சம்­பூரில் பொரு­ளா­தார வல­யத்­துக்­கொன ஒதுக்­கப்­பட்ட 818 ஏக்கர் காணி மற்றும் கடற்­படை முகாம் அமைந்­துள்ள உயர் பாது­காப்பு வல­யக்­காணி 237 ஏக்கர் நிலம் ஆகி­ய­வற்றை மக்­க­ளிடம் திருப்பி ஒப்­ப­டைக்க அர­சாங்கம் தீர்­மானம் எடுத்­தி­ருந்த போதிலும் தனியார் நிறு­வ­ன­மான கேற்வே வழக்­குக்கு சென்ற கார­ணத்­தினால் நிலங்­களை கைய­ளிப்­பதில் தாம­தங்கள் ஏற்­ப­டு­கின்­றன.

வடக்கில் விடு­விக்­கப்­பட்ட காணிகள் கூட 25 வரு­டங்­க­ளுக்குப் பிறகு விடு­விக்­கப்­பட்­டதன் கார­ண­மாக மக்கள் அங்கு சென்று உடனே குடி­யேற முடி­யாத சூழ்­நி­லையே காணப்­ப­டு­கி­றது.

ஆனால் தற்­பொ­ழுது விடு­விக்­கப்­படும் நிலங்­களில் இந்­திய வீட்­டுத்­திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட மாட்­டாது.

ஆகை­யினால் இலங்கை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து போதிய நிதியை பெற­மு­டி­யாத நிலை காணப்படுவதனால், வெளி­நா­டுகள் சில­வற்­றுடன் அது குறித்து பேசவும் புலம்­பெ­யர்ந்த மக்களிடமிருந்து ஏதா­வது உத­வி­களைப் பெற்று நிலங்கள் விடு­விக்­கப்­ப­டு­வதன் பயனை மக்கள் அனுப­விக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவும் சில வேலைத்­திட்­டங்­களை வகுக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால் ஜனா­தி­பதி தேர்தல் முடிந்த இரண்டு மூன்று மாத காலங்­களில் ஒரு குறித்த சூழ்­நிலை நாட்டிலே நில­வி­யி­ருந்­த­போதும், அதற்குப் பின்­ன­ரான காலத்­திலே குறிப்­பாக தற்­பொ­ழுது இன­வா­தத்தை மீண்டும் தூண்­டு­கின்ற செயற்­பா­டுகள் மிகத் தீவி­ர­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

குறிப்­பாக நிலங்­களை மீளக் கைய­ளிப்­ப­த­னாலும் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­த­னாலும் ஏதோ நாட்டின் பாது­காப்­புக்கு சவால் ஏற்­பட்­டுள்­ளது என பாரிய விட­ய­மாக தெற்­கிலே இப்­பொ­ழுது சித்தரிக்கப்­ப­டு­கின்­றது.

ஆகை­யினால் தான் இந்த விட­யங்கள் குறித்து நாம் பேசு­கின்ற போது, தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தியில் தேவை­யில்­லாத ஒரு பயத்தை உரு­வாக்­கி­விடும்.

எதை நாங்கள் அடைய நினைக்­கின்­றோமோ அதை அடைய முடி­யாத வகையில் தடைகள் ஏற்படக்கூடாது என்ற கார­ணத்­தினால் தான் லண்டன் பேச்­சு­வார்த்­தையை பகி­ரங்­கப்­ப­டுத்­தாத பேச்சுவார்த்­தை­யாக நடத்த வேண்­டு­மெனத் தீர்­மா­னித்தோம்.

இப்­படி பல பேச்­சு­வார்த்­தை­களை நாம் நடத்­தி­யி­ருக்­கிறோம். ஆனால் கட்சித் தலை­வ­ருக்கு தெரி­யாமல் எதுவும் நடப்­ப­தில்லை.

இந்த சந்­திப்­புக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனின் பணிப்பின் பேரில்தான் மேற்­படி பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்டேன்.

அதுபோல் தான் பிர­த­மரின் பணிப்பின் பேரில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவின் பணிப்பின் பேரில் அவரின் செய­லா­ளரும் இப்­பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்­டார்கள். வெளி­நாட்டு அர­சாங்­கங்­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டார்கள்.

இதில் முக்­கி­ய­மாக வடக்­கிலும், கிழக்­கிலும் ஆயிரம் ஆயிரம் வீடுகள்(2000) நிர்­மா­ணிப்­ப­தற்­கான பண உத­வி­களை பெறும் விட­யங்கள் குறித்தும் பேச்­சு­வார்த்­தையின் போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

தொடர்ச்­சி­யாக எதிர்­வரும் நாட்­களில் கொழும்­பிலும் இக்­க­லந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. இது­போ­லவே கைதி­களின் விடு­தலை சம்­பந்­த­மாக எவ்­வித நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமெனவும் பேசியுள்ளோம்.

அத்துடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும், தனிநபர்களுக்கும் கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும் அதற்குரிய நிகழ்ச்சி நிரலை எவ்வாறு அமைக்கலாமெனவும் கலந்துரையாடியுள்ளோம்.

இதன்பெறுபேறு என்னவென்பது குறித்து பகிரங்கமாக நான் கூறவிரும்பவில்லை. நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகளினால் எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே சில சமயங்களில் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் பணிப்பின் பேரிலேயே மேற்படி பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொண்டேன்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நீண்ட விளக்கமான பதிலை கடந்த வௌ்ளியன்று பாராளுமன்றத்தில் அளித்திருந்தார் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version