அண்மையில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விருது விழாவில், நடிகை ரிகானா வித்தியாசமான உடையில் கலந்து கொண்டார்.
மஞ்சள் நிறத்தில் தரையில் படர்ந்திருந்த அந்த உடையின் பெயர் ‘யெல்லோ கியோ பீ’ (Yellow Guo Pei).
இதனை சீனாவைச் சேர்ந்த Guo Pei எனும் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், கைத்தறி முறையில் கடந்த 2 வருடங்களாக உருவாக்கி உள்ளார்.
காண்போர் விழிகளை விரியச் செய்த அந்த உடையை, தனது உதவியாளர்கள் உதவியுடன் தரையில் படராதவாறு பிடித்து, கேன்ஸ் விழாவிற்கு வந்தார் ரிகானா.
அவரது ஆடை அலங்காரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பிரபல நட்சத்திரங்கள், அந்த ஆடையை ‘பீட்சா, ஆம்லெட்’ போன்றவையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தனர்.