வேப்பூர்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தோட்டத்தில் மாங்காய் பறித்த சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏறற்படுத்தி உள்ளது. இந்த  வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேப்பூர் மாவட்டத்தில் உள்ள கீசான் கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிவபூசன் சுக்லாவும், ரமேஷ் பிரசாத் சுக்லாவும் அருகருகே வசிப்பவர்கள். சிவபூசன் சுக்லாவின் 17 வயதான மகள் கோமல் ரமேஷ் பிரசாத் சுக்லாவின்  தோட்டத்தில் உள்ள மாங்காயை பறித்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு.

இதனால் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியதை அவளது தந்தையும், உறவினர்களும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ்  பிரசாத்தும், அவரது குடும்பத்தினரும், வீட்டில் தனியாக இருந்த சிறுமி மீது மண்ணென்ணையை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பித்து விட்டனர்.

அவரது  அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிவபூசன் சுக்லா அளித்த புகாரின் பேரில் ரமேஷ்  மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version