நியூயார்க்: உலகிலேயே மிக நீளமான சடைமுடி கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ள ஆஷா மண்டேலா இந்த முடியை வெட்ட நினைப்பது என்பது நான் தற்கொலைக்கு முயல்வதற்கு ஒப்பானதாக இருக்கும் என்று கூறுகிறார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசிக்கும் 52 வயது ஆஷா மண்டேலாவின் கூந்தல் நீளம் சுமார் 19 அடி, எடை 39 பவுண்டுகள் (17 கிலோவுக்கும் அதிகம்).
இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு கின்னஸ் சாதனையும் படைத்துள்ள ஆஷா, கடந்த 25 ஆண்டுகளாக இந்த கூந்தலை ஆர்வத்துடன் வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.