கலிபோர்னியா: ஒரே ஒரு பாட்டுல உலகம் முழுக்க பேமஸ் ஆகறது எப்படிங்குறத 6 வயசு குட்டிப்பாப்பா ஜொஹானா கிட்டதா கத்துக்கணும்.
இந்தக் குட்டிப்பாப்பா ஆடுன அட்ராசிட்டி வீடியோவ யூ-டியூப்ல மட்டும் இதுவரைக்கும் ஒரு கோடி பேருக்கும் மேல பாத்துருக்காங்க, பேஸ்புக், ட்விட்டரெல்லாம் தனிக்கணக்கு.
கடந்த ஜூன் 7-ம் தேதி இந்தக் குட்டிப் பாப்பாவுக்கு ஸ்கூல்ல ஒரு டேன்ஸ் காம்படிஷன், அதுவும் ஒரே பாட்டுக்கு 3 குட்டிப்பாப்பாக்களோட சேர்ந்து ஒரே மாதிரி ஆடணும், மத்த குட்டீசவிட தன்னோட பொண்ணு நல்லா ஆடணும்னு நினைச்ச அவங்க அம்மா எலிசா, ரிகர்சல்ல காட்டு காட்டுன்னு காட்ட,
அம்மாவையே தூக்கி சாப்புட்றா மாதிரி அந்த குட்டிப் பாப்பா ஸ்டேஜ்ல பின்னி எடுக்க… அய்யய்யோ.. முடியல… என்று ஆடியன்சே தெரிச்சு ஓட…அந்த கிச்சுகிச்சு வீடியோவ நீங்களே பாருங்க……