அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது. இதற்கு ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still Exists in Mauritiana” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டிலிருந்து சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
“……அவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்படவில்லை. அல்லது அவர்களின் உரிமையாளர்களால் உடலின் எந்தபாகத்திலும் சூட்டுக்கோல் கொண்டு அடையாளமிடப்படவில்லை.
இருப்பினும் அடிமைகள் மொரிஷியானாவில் இன்னும் இருக்கிறார்கள். சூரியன் சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில் ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டோ அல்லது மொரிஷியானாவின் நுவாக்ச்சோட்டில் (Nouakchott) விலையுயர்ந்த கார்பெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட செல்வந்தர்களின் வீடுகளில் புதினா கலந்த தேயிலையை விருந்தினர்களுக்கு வழங்கிக் கொண்டோ இருக்கும் அந்த அடிமைகள் அவர்களின் உரிமையாளர்களுக்குப் பரம்பரை, பரம்பரையாக சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்….
அது போன்ற அடிமைகள் பல்லாயிரக் கணக்கானவர்கள் மொரிஷியாவில் இருப்பதாக அங்கிருக்கும் அடிமைகள் ஒழிப்பு இயக்கத்தினர் கூறுகின்றார்கள்…..அடிமையாகப் பிறந்து பின்னர் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினராக மாறிய பவுபாகார் மெஸ்சூத் என்பவர், ‘இந்த வழக்கமானது ஒருவன் ஆடு, மாடுகளை வைத்திருப்பது போன்றது..அடிமையான ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளாகவே இருப்பார்கள்….’ என்கிறார்”.
CREDIT: REUTERS
இன்னொரு முக்கிய இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இன்றளவும் அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து நடபெறுகிறது.
இருப்பினும் கடுமையான இஸ்லாமிய கலாச்சார பின்னனி காரணமாக இது குறித்தான பெருமளவு தகவல்கள் வெளியே வராமல் மூடி மறைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் சவூதி ஷேக்குகளின் வீடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியச் செல்கிறார்கள்.
அவ்வாறு வேலைக்குச் செல்லும் அந்தப் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஏறக்குறைய அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அவ்வாறான பணிப்பெண்களில் பெருமளவினர் அல்லா “அமைதி மார்க்கத்தினருக்கு” குரானில் அளித்த அனுமதியின்படி, அவர்களின் முதலாளிகளுக்குப் பாலியல் அடிமைகளாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்.
தப்பிச் செல்ல வேறு வழியின்றி வீட்டில் அடைபட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அதன்படி நடப்பதினைத் தவிர்த்து வேறு வழியேதும் இல்லை.
சவுதி அரேபியாவிலிருந்து வந்து கொலராடோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருந்த ஹொமைடான் அல்-துருக்கி என்பவன் அவனது பிலிப்பைன் நாட்டு வேலைக்காரியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான்.
நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்ட ஹொமைடான், தான் செய்தது இஸ்லாமிய சட்டப்படி தவறு அல்லவென்றும், அவ்வாறு நடக்ப்பது “ஒரு இஸ்லாமியனின் பரம்பரை வழக்கம்” என்றும் வாதிட்டான்.
அமெரிக்க நீதிபதி அவனுக்கு இருபது வருடம் சிறைத் தண்டனை விதித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார் என்பது வேறு விஷயம். ஒரு பி.ஹெச்.டி படித்த முஸ்லிமே இப்படியென்றால் உலகமெங்கும் நிறைந்திருக்கும் கல்வி அறிவற்ற முஸ்லிம்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவில் பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது,
“….எங்களிடம் பேசிய பல பணிப்பெண்கள் அவர்களின் ஆண் உரிமையாளர்களால் கற்பழிக்கப்பட்டதாலும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்ட்டதாலும் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலைமையில் இருந்தார்கள்.
பெரும் துயரத்துடனும், கண்ணீருடனும் அந்தப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தாரகள்….தாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்…..
அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள்….”
இன்றும் இதுபோல பல ஆயிரக்கணாக்கான அடிமைப் பெண்கள் சவூதி அரேபியாவின் மாட மாளிகைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒவ்வொரு வருடமும் மலேஷியா, இந்தியா, ஸ்ரீலங்கா, எகிப்து, பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளுக்குப் பயணம் செய்யும் கிழடு தட்டிய, பணக்கார சவூதி ஷேக்குகள், அங்கிருக்கும் ஏழைப் பெண்களின் பெற்றோர்களிடம் சிறிதளவு பணம் கொடுத்து அந்த அப்பாவிப் பெண்களை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த பின்னர் தங்கள் நாட்டிற்கு அழைத்துப் போவார்கள்.
வளமான வாழ்க்கையைக் கண்ணில் தேக்கிச் செல்லும் அந்தப் பெண் சவூதி அரேபிய வழக்கப்படி ஒரு அடிமையாக மட்டுமே நடத்தப்படுவாள்.
இஸ்லாமிய அடிமை வியாபாரம் சூடானில் மிகப் பழங்காலம் தொட்டே நடந்துவரும் ஒரு விஷயம். இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே ஆக்கிரமிப்பிற்கு ஆளான சூடான் 652-லிருந்து 1276-ஆம் வருடம் வரை ஒவ்வொரு வருடமும் 400 அடிமைகளை காலிஃபாக்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது.
பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமிய நூலான ஹுடுத் அல்-அலாம், சூடான் இஸ்லாமிய அடிமை வேட்டைக்காரர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்தது எனக் கூறுகிறது. அதுவே இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
1990-ஆம் வருடம் சூடானிய அடிமைகள் விடுதலைக்கு உழைத்துக் கொண்டிருந்த ஜான் எய்ப்னர் (John Eibner) அளிக்கும் சித்திரத்தின்படி, கறுப்பின பெண்களும், குழந்தைகளும் (கிறிஸ்தவ, பழங்குடி நம்பிக்கையுடைய) அரேபிய அடிமை வேட்டைக்காரர்களாலும், அரசாங்கத்தின் பாப்புலர் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் எனப்படும் பி.டி.எஃப்பினராலும் பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் இஸ்லாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுப் பின்னர் ஏதாகிலும் ஒரு முஸ்லிமுக்கு வைப்பாட்டிகளாகக்கப் பட்டார்கள்.
அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட இளம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஜிகாதிகளாக மாற்றப்பட்டார்கள்.
சூடானில் பல ஆண்டுகள் பணி புரிந்த ஜான் எய்ப்னர், 1999-ஆம் வருடம் மட்டும் இவ்வாறான 1,783 அடிமைகளை விடுவித்தார்.
பிற அமைப்புகள் 1945-ஆம் வருடம் துவங்கி 1999-ஆம் வருடம் வரை ஏறக்குறைய 15,447 சூடானி அடிமைகளை விடுவித்ததாக பதிவு செய்திருக்கின்றன.
சூடானை பல காலம் ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் கூட இதனைத் தடை செய்ய இயலவில்லை. அந்த அளவிற்குப் பரவலான ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது.
இஸ்லாமிய வடக்கு சூடானியர்களால் இந்த அடிமை வியாபாரத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தெற்கு சூடானில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், பழங்குடியினரும்தான்.
மேற்குலகில் வாழப்போன சவூதிகளும் பிற செல்வந்த நாடுகளின் முஸ்லிம்களும் தங்களின் தேவைகளுக்கென அடிமைகளை இறக்குமதி செய்தி கொள்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தி.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் சவூதி, சூடானிய நாட்டினர் தங்களிம் பணிப்பெண்களை அடிமைகளாக நடத்தியதன் காரணமாகப் பல வழக்குகள் இன்றைக்கு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
Slave: My True Story என்னும் சுயசரிதைப் புத்தகத்தை எழுதிய மென்டே நாசர் (Mende Nazer) என்னும் பெண்மணி, 1992-ஆம் வருடம் சூடானின் நுபா மலைப்பகுதியில் அரேபிய அடிமை வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்டவர்.
அவ்வாறு பிடிக்கப்பட்ட அந்தப் பெண் முதலில் கார்ட்டும் (Khartoum) நகரில் வாழ்ந்த ஒரு பணக்கார அரேபியர்களுக்கு அடிமையாக விற்கப்பட்டார்.
பின்னர் லண்டனில் வாழ்ந்த ஒரு சூடானிய தூதரக அதிகாரிக்குப் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து 2002-ஆம் வருடம் தப்பிய மென்டே நாசர், பிரிட்டனில் அகதியாக அடைக்கலம் புகுந்தார்
அமைதி மார்க்கத்தினர் தங்களின் அடிமைகளை நடத்தும் போக்கினைக் குறித்து National Reviews பத்திரிகைத் தகவல் ஒன்று இப்படிச் சொல்கிறது,
“ஐந்து வருடங்களுக்கு முன்னர் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – இவர்களில் அப்போதைய சவுதி அரசரான ஃபகாத்தின் சகோதரியும் ஒருவர் – லண்டனில் தங்களிடம் வேலை செய்த ஒரு பிலிப்பைன் நாட்டுப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கினர்.
சவுதி அரச குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதுடன், உணவேதும் அளிக்காமல் பட்டினி போட்டு ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டினார் அந்தப் பணிப்பெண்”
அமெரிக்காவில் வசிக்கும் சவுதி அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பெண்களின் நிலைமையை விளக்கும் அமெரிக்க அதிகாரபூர்வ தகவலொன்று,
அவர்களின் வேலைக்கான ஒப்பந்தம் பணிப்பெண்ணின் சம்மதமில்லாமல் அவர்களின் உரிமையாளர்களால் இஷ்டம் போல மாற்றப்படுகிறது.
ஓய்வு ஒழிச்சலற்ற பல மணி நேர வேலை; எந்த விதமான மருத்துவ உதவியும் பணிப்பெண்களுக்கு அளிக்க மறுக்கப்படுகிறது.
கீழ்த்தரமான வசைகளும், உடல் ரீதியான துன்பங்களும் மற்றும் சிறையைப் போன்ற சுதந்திரமற்ற சூழ் நிலையும்….நாங்கள் பேசிய எல்லாப் பெண்களும் அமெரிக்காவிலேயே பணிபுரிந்தார்கள்…அவர்களில் சிலர் முதலில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தவர்களாகவும் இருந்தார்கள்….இந்த இரண்டு நாடுகளில் பணி புரிந்த பெண்களின் நிலைமையிலும் எந்தவிதமான மாற்றங்கள் இல்லை…..” என்கிறது.
அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளிலேயே இவர்கள் இப்படியென்றால், இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கற்பனை செய்யவே உடல் கூசுகிறது.
அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது நபியின் காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.
மேற்கத்திய நாடுகளுக்கு வாழப்போன இஸ்லாமியர்கள் இன்றும் இதனையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய காலிபேட் அமைக்கத் துடிக்கும் மேற்கத்திய ஜிகாதிகள் எண்ணிக்கையில் பெருகி வருவது கவலைக்குரிய ஒன்றே.
“இறை தூதர்” முகமது குறித்துக் கார்ட்டுன் வெளியிட்ட டேனிஷ் செய்திப் பத்திரிகையை எதிர்த்து முஸ்லிம்கள் இலண்டனில் நடத்திய ஊர்வலத்தில் “தங்களை டென்மார்க்கிற்கு அனுப்பி அவர்களின் பெண்களையும் மனைவிகளையும் ஜிகாதி வெற்றிப் பரிசாகப் பிடிக்க வேண்டும்” என்று சத்தமிட்ட ஒரு முஸ்லிம், “கைபாரில் முகமது யூதர்களுக்கு எதிராக நடத்தியதை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றது இஸ்லாமியர்களின் அடிமை பிடிக்கும் மனோபாவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டே.
(முற்றும்)
மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்