முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைத்து பரிசளிக்கப்பட்ட தங்க நகைகள் கறுத்துவிட்டதாக, வட மாகாண அமைச்சரொருவருக்கு  முன்னாள்  போராளியொருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

வடமாகாண சபையும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தும் மக்கள் குறை நிவர்த்தி நடமாடும் சேவை பாலிநகர் மகா வித்தியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

இதன்போதே முன்னாள் போராளியொருவர் வடமாகாண அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் முன்னாள் போராளிகளான 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

w_ltte_1இதன்போது, ஜோடிகளுக்கு தங்கச் சங்கிலியும் பரிசளிக்கப்பட்டது. தங்கச் சங்கிலிகள் என்று அன்று வழங்கப்பட்ட நகைகள் பித்தளை எனவும் அவை, சில மாதங்களிலேயே கருத்துவிட்டன என்றும்  முன்னாள் போராளி, தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தவிர தங்களுக்கு குடியிருப்பு காணி, வீடு, வாழ்வாதாரம் என்பன ஏற்படுத்தித்தரப்படும் என திருமணத்தின் போது கூறப்பட்ட போதும், எவ்வித உதவிகளும் இதுவரையில் தங்களுக்குச் வழங்கப்படவில்லையெனவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், வடமாகாண சபை தங்களுக்கு எதாவது உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளார்.

முன்னாள் புலி போராளிகள் 53 ஜோடிகளுக்கு  திருமணம்! (இது நடந்தது 2010 இல்!)
19-06-20105
தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்த 53 ஜோடிகளுக்கு ஒரே நாளில், ஒரே மேடையில் இன்று காலை படைத்தரப்பினரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இத்திருமண விழாவை முன்னின்று நடத்தினார்.

வவுனியாவின் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இத்திருமண விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.

இவ் வைபவத்தில் ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ, ஹிந்தி திரைப்பட நடிகர் விவேக் ஒபராய், அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version