திருமணம் நடைபெறவிருந்த யுவதியொருரை இனந்தெரியாதவர்கள் முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்ற சம்பவம் சனிக்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மூளாயைச் சேர்ந்த யுவதிக்கும் கனடாவைச் சேர்ந்த ஒருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை (21) பதிவுத் திருமணம் நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக யுவதியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மாப்பிள்ளை வீட்டாரின் உறவுக்கார பெண்ணொருவருடன் குறித்த யுவதி யாழ்ப்பாண நகருக்கு செல்வதற்காக பஸ்ஸில் சென்றுள்ளார்.
குறித்த பஸ் மூளாய் வீதியூடாக சுழிபுரம் நோக்கி சென்றபோது, பஸ்ஸை சில நிமிட நேரம் நிறுத்திய பஸ் சாரதி, அலைபேசியில் ஒருவருடன் உரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முச்சக்கரவண்டியில் வந்த இளைஞர் ஒருவர் பஸ்ஸுக்குள் புகுந்து யுவதியைப் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதற்கு முச்சக்கரவண்டியின் சாரதியும் உதவியதாகவும் பஸ்ஸின் சாரதியோ நடத்துனரோ அதைத்தடுப்பதற்கு முற்படவில்லையெனவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுவதியின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, தனியார் சிற்றூர்தி சங்கத்தின் காரைநகர் பிரிவுத் தலைவரை அழைத்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 17 பேர் விளக்கமறியலில்
21-06-2015
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர்.
அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, திடீர் என அங்கு கூடிய சிலர் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாது தடுத்தனர்.
அவ்வேளை குறித்த குழு திடீர் என பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதனால் காயமடைந்த இரண்டு பொலிசார் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கசிப்பு உற்பத்தி செய்தார் என கூறப்படும் நபர் உட்பட 17 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவு இட்டுள்ளார்.