சென்னை: அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்த அப்பா சரத்குமாரை பழிக்குப்பழி வாங்க அவரது மகள் வரலட்சுமி, நடிகர் விஷாலை பயன்படுத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்த சரத்குமார் – விஷால் மோதல், இப்போது பகிரங்கமாக வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது.

வெளியூரில் வசித்துவரும் நாடக நடிகர்களின் இல்லங்களில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் முதல் ஆளாக ஆஜராவது ராதாரவின் பழங்கால வழக்கம்.

ராதாரவி யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கபடுவார் என்பது மிகையில்லாத உண்மை.

இப்போதுள்ள இளம்நடிகர்கள் ஷூட்டிங், கேரவன், ஸ்டார் ஓட்டல், ‘உற்சாக” பார்ட்டி இப்படித்தான் தாங்கள் லைஃப் ஸ்டையிலை டைம்டேபிள் போட்டு வாழ்ந்து வருகிறார்கள்.

திடீரென்று நடிகர் சங்கம தேர்தல், போட்டி என்று விஷால் களம் இறங்கி இருப்பதைப் பார்த்து, சீனியர் நடிகர்கள் மட்டுமல்ல, இளம் நடிகர்களும் ஆச்சர்யமாக அண்ணாந்து பார்க்கிறார்கள்.

சரத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்த்து  ‘நமக்கேன் வம்பு” என்று விஷால் தரப்பு பின் வாங்கிவிடும் என்று சரத் அணியினர் எதிர்பார்த்தனர்.

எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக மதுரை, கோவை, புதுக்கோட்டை, கரூர் சென்று அங்குள்ள நாடக நடிகர்களை நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் சந்தித்ததை சரத்குமார் அணியினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வழக்கமாக வாழ்க்கையில் நடந்தவைகளை சினிமாவாக எடுத்து வெளியிடுவார்கள். எப்போதோ சினிமாவில் வந்த திரைக்கதை இப்போது நிஜக்கதையாக நிகழ்வது ஆச்சர்யமான உண்மை.

பல வருஷத்துக்கு முன்பு சிவகுமார், ஜெயசித்ரா நடித்த ‘எங்கம்மா சபதம்’ திரைப்படம் வெளிவந்தது.

கதைப்படி சிவகுமாரின் அம்மா ஜெயசித்ராவின் குடும்பத்தை ஒரு காலத்தில் பழிவாங்கி விடுவார். அந்த கோபத்தை மனதில் கொண்டு சிவகுமாரை மணந்து அவரது அப்பாவை பழிக்குப்பழி வாங்குவார் ஜெயசித்ரா.

அதுபோல தனது அம்மா சாயாதேவியை விவாகரத்து செய்த அப்பா சரத்குமாரை பழிக்குப்பழி வாங்க விஷால் என்கிற அஸ்திரத்தை பயன்படுத்து வருகிறார்.

அம்மா சாயாதேவியின் மனம்குளிர, அவரது எண்ணங்களை,  ஆலோசனைகளை விஷால் வாயிலாக வர நிறைவேற்றி வருகிறார் சரத்மகள் வரலட்சுமி. அப்பா – மகள் இருவருக்கும் போர் நடக்கும் களம், நடிகர் சங்க தேர்தல் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

– சத்யாபதி   

Share.
Leave A Reply

Exit mobile version