முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் மட்டுமே குத்தாட்டம் போட நடிகை ஷர்மி, முன்னுரிமை கொடுக்கிறாராம்.

காதல் அழிவதில்லை திரைப்படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சார்மி. அதையடுத்து ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு என சில திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் எந்த நேரடி தமிழ்ப்படங்களிலும் நடிக்கவில்லை.

எனினும், அவர் தெலுங்கில் நடித்த திரைப்படங்கள்தான் அவ்வப்போது தமிழில் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்தன. அதனால்தான் ஷர்மிக்கும், தமிழ் ரசிகர்களுக்குமிடையிலான தொடர்பு அப்படியே இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது விக்ரம் நடித்து வரும பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் ஆடியிருக்கிறார் ஷர்மி.

சாதாரண டூயட் பாடல்களிலேயே அதிரடி ஆட்டம் போடும் சார்மி, இந்த குத்துப்பாட்டில் நறுக் ஆட்டம் போட்டிருக்கிறாராம்.  அதோடு இதையடுத்து தொடர்ந்து தமிழ் சினிமா கோதாவில் இறங்கவும் அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இந்தநேரத்தில், விக்ரம் திரைப்படத்தைப்போலவே இன்னொரு திரைப்படத்தில் குத்தாட்டமாட ஷர்மியை ஒரு தயாரிப்பாளர் அணுகியபோது, திரைப்படத்தின் ஹீரோ பிரபலமில்லாதவர் என்பதை சுட்டிக்காட்டி நடனமாட மறுத்து விட்டாராம்.

ஆக முன்னணி ஹீரோ திரைப்படங்களுக்குமே மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறாராம் ஷர்மி.

என்னம்மா ஷர்மி இப்டி பண்றீங்களேமா?

 

article_1435127177-Charmi1

Share.
Leave A Reply

Exit mobile version