உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அதேபோல் நீங்கள் அருந்தும் கோப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது செல்பி எடுப்பதற்கு என்று சிறப்பு போன்கள் வரும் அளவிற்கு உலகத்தையே ஆட்டிப்படைக்கும் விடயமாக மாறிவிட்டது.

இதன் அடுத்த கட்டமாக லண்டனில் 3D பிரிண்டர் தொழில்நுட்பம் அடிப்படையில் கோப்பி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று நுரையை பயன்படுத்தி செல்பிகளை வரையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் செல்பி, புகைப்படம் அல்லது செய்திகள் ஆகியவற்றை இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் மூலம் கடைகாரர்களுக்கு அனுப்பவேண்டும்.

அடுத்த 10 வினாடிகளில் நீங்கள் அனுப்பிய படங்கள் கோப்பியின் மேற்பகுதியில் அழகாக மிதந்து கொண்டிருக்கும்.

Share.
Leave A Reply

Exit mobile version