அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அங்கு இதுவரை 3 இலட்சத்து 90 ஆயிரம் ஓரின சேர்க்கை தம்பதியினர் அமெரிக்காவில் உள்ளதாக கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் உள்ள வில்லியம் நிறுவனம் புள்ளி விபரத்துடன் தெரிவித்துள்ளது.

எனவே, அவர்கள் தங்களது திருமண அங்கீகார உரிமை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் 36 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரமளித்தன.

 scotus-gaymarriage-getty_custom-ee699a828ad8d9c959eca6e1792c12099de237c7-s800-c85

ஆனால் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள 14 மாகாணங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க வில்லை.

எனவே அவர்கள் தங்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்க கோரி உயர் நீதிமன்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று உயர் நீதிமனறம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதன்படி அமெரிக்கா முழுவதும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளித்து உத்தர விட்டது. ஏற்கனவே 36 மாகாணங்கள் அங்கீகரித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள 14 மாகாணங்களும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version