நயினை அம்மன் தேர்த்திருவிழா இன்று : பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்
நயினாதீவின் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் வெளிடாடுகளில் இருந்தும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.