நிர்வாண கோலத்திலுள்ள சிகையலங்காரக் கலைஞர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிகையலங்காரம் செய்த சிகையலங்கார நிலையமொன்றை ரஷ்ய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலுள்ள சிகையலங்கார நிலையமொன்றே இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு நிர்வாண சிகையலங்காரம் செய்துவந்துள்ளது.
மதுபோதையிலிருந்த வாடிக்கையாளர்கள் சிலர், மேற்படி சிகையலங்கார நிலையம் என நினைத்து, அயலிலுள்ள சிறுவர் நிலையமொன்றின் கதவை தட்டுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொலிஸார் அந்நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த சலூனில் வாடிக்கையாளர்கள் நுழைந்தவுடன், அவர்களுடன் நிர்வாண கோலத்திலுள்ள யுவதிகள் உரையாடி, அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விபரிப்பர் என வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சிகையலங்கார நிலையத்தில் விபசார நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழியருடன் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பை அந்நிலையம் வழங்கிவந்தமை வீடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ரஷ்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.