கட்டிடமொன்றில் சடுதியாக தீ பரவியதையடுத்து இரு பெண்கள் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சம்பவமொன்று அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கட்டிடத்தில் கரும்புகையுடன் தீ பரவியதையடுத்து அதிலுள்ளவர்களை காப்பற்றும் பொருட்டு இரு இளைஞர்கள் குறித்த கட்டடத்தின் ஜன்னல் அருகில் நின்று கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் குறித்த ஜன்னலின் வழியே பார்த்த இரு பெண்களையும் ஜன்னலின் வழியே குதிக்குமாறு தெரிவித்த குறித்த இரு இளைஞர்களும் அந்த பெண்கள் இருவரையும் கைகளால் ஏந்தி அவர்களின் உயிரை காப்பாற்றினர்.
இதேவேளை குறித்த கட்டிடத்தில் தீ பரவியதையடுத்து அதிலிருந்து 30 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறிய நிலையில் எவருக்கும் உயர்ச் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது