ஹர்னாம் கெளர், இங்கிலாந்தில் ஸ்லவ் என்ற ஊரில் வசித்து வரும் 24 வயது பெண். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற ஹார்மோன் குறைபாட்டின் காரணமாக 11 வயது முதல் அவரது முகத்தில் ரோமங்கள் வளரத் தொடங்கின. உலகம் அறியாத பருவத்தில் தனக்கு மட்டும் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினார்.
“ஆனால் இன்று நான் அப்படி இல்லை. என் உடலில் ஏற்படும் மாற்றங்களை நான் ஏன் மறைக்க வேண்டும்? அது என் அடையாளம். அவள் தான் முழமையான நான்.
என்னை நானே ஏன் வருத்திக் கொள்ள வேண்டும். எனக்கு இப்படி இருப்பது பிடித்திருக்கிறது” என்று தன்னம்பிக்கையோடு பேசியிருக்கும் ஹர்னாம் தற்போது இங்கிலாந்தின் தன்னம்பிக்கையின் அடையாளம்.
பெண்ணுக்கே உண்டான அழகும், நாணமும், தன்னம்பிக்கையும் சேர்ந்து வெளிப்பட்ட ஹர்னாமின் புகைப்படங்கள் மக்களின் பலத்த பாராட்டுகளை குவித்து வருகிறது. ஹர்னாமை முழுமையாக உணரவைத்த, முகரோமங்களில் மலர்கள் வைத்து செய்யப்பட்டிருந்த அலங்காரம், தன் மீது தான் கொண்ட காதலின் வெளிப்பாடு.
மேலும் படங்களைப் பார்க்க : https://www.rocknrollbride.com/2015/06/flower-beard-bridals-with-harnaam-kaur/