உரும்பிராய் பகுதியில் இளம் ஜோடி தற்கொலைக்கு  முயற்சி செய்துள்ளதாக  கோப்பாய் பொலிஸார் இன்று (04) தெரிவித்தனர்.

உரும்பிராய் கிழக்கு ஊரெழு பகுதியினை சேர்ந்த யுவதியும், மல்லாகம் பகுதியினை சேர்ந்த இளைஞனும் ஐந்து வருடம் காதலித்துள்ளனர்.

urum_kathal_01இந்நிலையில், குறித்த யுவதிக்கு தெரியாமல், யுவதியின் வீட்டார் வெளிநாட்டு இளைஞனுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனால் மனவிரக்தி அடைந்த யுவதி, காதலன் பணிபுரியும் இடத்திற்கு சென்று தனக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறி, தன்னை பதிவுத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இந்நிலையில், இருவரும் மனவிரக்தியடைந்து ஓடும் பஸ்ஸுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் இருவரின் நிலைப்பாட்டினை அறிந்து கொண்டதுடன், அவர்களை; காப்பாற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version