லண்டன்: நாம் கைக்குழந்தையாக இருக்கும்போது முளைக்கத் தொடங்கும் பற்கள் நாளடைவில் ஆட்டம் கண்டு, சுமார் 8-12 வயதாகும்போது விழுந்து விடுவது வாடிக்கையான விஷயம்தான்.

ஆனால், ஆட்டம் காண தொடங்கியதில் இருந்து அது கீழே விழும்வரை ஒவ்வொரு பல்லும் நமது வாய்க்குள் ஏற்படுத்தும் ‘இருக்கட்டுமா., போகட்டுமா..?’ சவால் என்பது சிறுவர்-சிறுமியருக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைந்து விடுவது உண்டு.

அவ்வகையில், தனக்கு சவால் விட்ட ஒரு கடைவாய்ப் பல்லுக்கு விடை கொடுக்க துணிந்த 11 வயது சிறுமி, பல் டாக்டரின் உதவியையோ, கொறடாவின் துணையை தேடவில்லை.

மாறாக, ஆடிக் கொண்டிருந்த அந்த பல்லை ஒரு நைலான் தங்கூசியால் கட்டி, மறுமுனையை ஒரு அம்பின் நுனியில் கட்டி, வில்லில்நாணேற்றி அந்த அம்பை விடுவித்து, தனக்குத்தானே பல் சிகிச்சை பார்த்து கொண்ட அட்டகாச காட்சி, வீடியோ வடிவில்..,

Share.
Leave A Reply

Exit mobile version