அமெரிக்காவில் குஞ்சுளை மீட்க போராடிய வாத்துக்கு பொலிசார் உதவிக்கரம் நீட்டிய வீடியோ காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனின் வெஸ்ட்லெக் பகுதியில், சாலையைக் கடந்து கால்வாய்ப் பகுதிக்குச் செல்ல தனது குஞ்சுகளுடன் வந்து கொண்டிருந்த வாத்து ஒன்று, அங்கிருந்த கழிவுநீர் கால்வாயில் தனது குஞ்சுகள் விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது.
இது பற்றி அப்பகுதியில் செல்பவர்கள் அறிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், கொஞ்சம் கூட யோசிக்காமல், உடனடியாக கழிவுநீர் கால்வாயின் மூடியைத் திறந்து, உள்ளே கைகளை விட்டு குஞ்சுகளை மீட்டனர்.
மேலும், ஒரு பொலிசார் கால்வாய்க்குள் எந்த உபகரணத்தின் உதவியும் இல்லாமல் தலையை உள்ளே விட்டு சின்னஞ்சிறு குஞ்சுகளை மீட்டு அதனை கால்வாயில் கொண்டு சேர்த்தனர்.
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெகுவாக பரவி வருகிறது.
வீடியோவைக் காண கீழுள்ள இப்படத்தின் மேல் அழுத்தவும்