ஐ.எஸ் வீரர்களிடமிருந்து தப்பி ஈராக்கின் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ள இரண்டு பெண்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இன பெண்களை கடத்தி அவர்களை கற்பழிப்பது, பாலியல் அடிமையாக விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிய இரண்டு பெண்கள் ஈராக்கின் கான்கி அகதிகள் முகாமில் அடைக்களம் அடைந்துள்ளனர்.
ஐஎஸ் அமைப்பினரால் தாங்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 19 வயது பெண் ஒருவர் கூறியதாவது, என்னை ஐ.எஸ்.அமைப்பினர் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அடிமையாக விற்றுவிட்டனர்.
அவர் எனக்கு பாலியல் தொல்லைகள் தரும்போது நான் மறுப்பேன்.
உடனே அவர் எனது ஒரு வயது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்துவார். எனது குழந்தையின் உயிருக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதற்காகவே அவர் விரும்பிய நேரத்தில் அவருடம் உறவு வைத்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் கூறியதாவது, என்னுடன் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை கடத்திய ஐ.எஸ் வீரர்கள் எங்களை ஏலத்தில் விட்டனர்.
என்னை ஏலத்தில் எடுத்த ஐஎஸ் வீரர் ஒருவர் தினமும் எனக்கு பாலியல் தொல்லைகள் தருவார். நான் மறுக்கும்போது மயக்க மருந்து கொடுத்து எனக்கு பாலியல் தொல்லைகள் தருவார்.
மேலும் ஒரு முறை அவர் கடுமையாக தாக்கியதில் இரண்டு மாதங்கள் நடக்க முடியாமல் சிரமப்பட்டேன். நான் தற்கொலைக்கு முயற்சி செய்த போது அவர் என்னை தடுத்துவிட்டார்.
மேலும் பலரிடமும் பாலியல் அடிமையாக விற்கப்பட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 200க்கு மேற்பட்ட யாஸிதி இன பெண்களை கடத்தி பாலியல் அடிமைகளாக நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.