2015 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதாக ஈபிடிபி அறிவித்துள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி அவரது தலைமையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் செயலாளர் நாயகத்தை முன்னிறுத்தியதாக பின்வருவோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.
1. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் (அசோக்)
2. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்)
3. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் (கிபி)
4. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி பிரதேச அமைப்பாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் (ரங்கன்)
5. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச அமைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (சாள்ஸ்)
6. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் பிரதேச அமைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்)
7. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச அமைப்பாளர் இராமநாதன் ஐங்கரன்
8. யாழ். மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா
9. சமூக சேவையாளர் “சொல்லின் செல்வர்” இரா. செல்வவடிவேல்