நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.

மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்-

1.மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம்
2.சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய்
3.தர்மலிங்கம் சித்தார்த்தன் – சுன்னாகம்
4.ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் – குடத்தனை
5.நல்லதம்பி சிறீகாந்தா – யாழ்ப்பாணம்
6.சிவஞானம் சிறீதரன் – வட்டக்கச்சி
7.ஈஸ்வரபாதம் சரவணபவன் -யாழ்ப்பாணம்
8.அருந்தவபாலன் கந்தையா – சாவகச்சேரி
9.மதினி நெல்சன் – பருத்தித்துறை
10.அனந்தராஜ் நடராசா – வல்வெட்டித்துறை

/p>
TNA-jaffna-nomination-2015-4

Share.
Leave A Reply

Exit mobile version