அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். இதன் போது, தான் தேர்தலில் போட்டியிடுவதாகயிருந்தால் த.தே.கூட்டமைப்பினூடாக விரும்புகின்றேன் என்று கூறினார்.

ஆனால் இதுவரை அவர் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தற்போதைய நிலை என்னவென்று எனக்கு தெரியாது என்றார்.

வடக்கில் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி. இன்று வேட்புமனு தாக்கல்

150707163822_tamil_national_alliance_640x360_bbc_nocredit

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும்  ஈழ­மக்கள்  ஜன­நா­ய­கக்­கட்சி ஆகி­யன வட­மா­கா­ணத்தில் இன்­றைய தினம் தமது வேட்பு மனுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ளன.

ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மையிலான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி ஆகிய கட்சிகள் இறுதித் தின­மான திங்­க­ளன்று வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்­ய­வுள்­ளன.

ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்சி பிற்பகல் 2.30இற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிற்­பகல் 3.00 மணிக்கும் யாழ்., வன்னி தேர்தல் மாவட்­டங்­களில் வேட்­பு­ம­னுக்­களைத் தாக்கல் செய்யவுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்­பாக யாழ்.தேர்தல் மாவட்­டத்தில் மாவை சேனா­தி­ராஜா தலை­மையில் தமி­ழ­ரசுக் கட்சி சார்­பாக சிவ­ஞானம் ஸ்ரீதரன், ஈஸ்­வ­ர­பாதம் சர­வ­ண­பவன், எம்.ஏ.சுமந்­திரன், அருந்­த­வ­பாலன், இரா­ஜேந்­திரா  ஆகி­யோ­ரும்…,

ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், ந.அனந்­தராஜ் ஆகி­யோரும் கள­மி­றங்­க­வுள்­ள­துடன் புளொட் தலைவர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன், ரெலோ சார்பில் என். ஸ்ரீகாந்தா ஆகி­யோ­ருக்கும் இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­நேரம் வன்னித் தேர்தல் மாவட்­டத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தலை­மையில் கள­மி­றங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தமி­ழ­ரசுக் கட்சி சார்­பாக சார்ள்ஸ் இரு­த­ய­நாதன், றோய்­ஜெ­யக்­குமார், சாந்­தி­ஸ்ரீஸ்­கந்­த­ராஜா ஆகி­யோரும்..,

ஈ.பி.ஆர்.எல்.எப். சார்­பாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன், வட­மா­காண சபை உறுப்பினர் டாக்டர் சிவ­மோகன், ரெலோ சார்­பாக வினோ­நோ­க­ரா­த­லிங்கம், மலை­யக மக்­களைப் பிரதிநிதித்துவப்­ப­டுத்தி பெருமாள் பழ­னி­யாண்டி (செல்­லத்­துரை) ஆகி­யோரும் புௌாட் சார்பில் வட­மா­காண சபை உறுப்­பினர் கந்­தையா சிவ­நேசன் (பவன்) ஆகியோர் கள­மி­றங்­க­வுள்­ளனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் யாழ். மாவட்டத்தில் மகளிர் விவ­கார முன்னாள் பிரதியமைச்சரும் யாழ்.மாவட்ட தேசிய அமைப்­பா­ள­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தலைமையிலான குழு­வினர் கள­மி­றங்­கு­கின்­றனர்.

ஈழ­மக்கள் ஜன­நா­ய­கக்­கட்சி சார்பில் செய­லாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் களமிறங்கவுள்ளனரென அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளராகவும், வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும், திருகோண மலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா முதன்மை வேட்பாளராகவும், அம்பாறை மாவட்டத்தில் ஹென்றி மகேந்திர முதன்மை வேட்பாளராகவும் களமிறங்க வுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் இடம்வழங்கப்படாத அனந்தி சசிதரன் நேற்றையதினம் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version