விமானப் பணிப்பெண் வேலை என்பது பல இளம் பெண்களின் கனவு என்றே சொல்லலாம்.

முயற்சியற்ற கனவு பலனளிக்காது, முயற்சி இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்று 57 வயதுப் பெண் நிரூபித்துள்ளார்.

57 வயதாகும் கேத்தரீன் ஹைன்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவர், வெர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் பணிப்பெண்ணாக உள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த விமானத்திற்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். எனினும், பணிப்பெண்ணாக வேண்டும் என்ற தனது விருப்பத்தைக் கொஞ்சம் தாமதமானாலும் தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார்.

இந்த விமான நிறுவனத்தின் பணிப்பெண்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்ட சுமார் 2000 பேர் விண்ணப்பித்தனர். வயதானாலும் நம்பிக்கை வைத்துப் போராடிய கேத்தரீன் ஹைன்ஸ் பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2A4681A300000578-3151009-image-a-1_1436192595807

Share.
Leave A Reply

Exit mobile version