தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு தன்னுடைய அடையாள அட்டை இலக்கம் தெரியாது என தெரியவருகிறது.

நேற்றைய தினம் (10.07) வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியாவில் தாக்கல் செய்திருந்தது.

இதன்போது அங்கு கடமையில் இருந்த அரச உத்தியோகத்தர்கள் வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் விபரங்களை பதிவு செய்த போது முதன்மை வேட்பாளர் ஆகிய  செல்வம் அடைக்கலநாதன்  அவர்களின் பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை கோரினர்.

அடையாள அட்டை இலக்கம் தெரியாமையால் அதனை சொல்ல முடியாது முன்னாள் எம்.பியும் முதன்மை வேட்பாளருமான அடைக்கலநாதன் தடுமாறினார்.

இதன் போது அருகில் நின்ற அவரது கட்சி உறுப்பினர் கையில் வைத்திருத்த விண்ணப்பத்தின் போட்டோ பிரதியை எடுத்து அதில் இருந்த முன்னாள் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அடையாள அட்டை இலக்கத்தினை காட்டினார். அதன் பின்னே பதிவு இடம்பெற்றது.

Share.
Leave A Reply

Exit mobile version